பக்கம் எண் :

1197
 
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப்

பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்

திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய

திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

5


2942.விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை

வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் தன்னை

அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா

ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்

பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்

பாழ்படுப்பான் சிலைமலைநாண் ஏற்றி யம்பு

தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய

திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6


வாழ்வானும், புகலூரானும் ஆகும், அலை எழும் நீர்நிலைகளை உடைய தென்பரம்பைக்குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.

கு-ரை: வரை ஆர்ந்த - மலையில் தங்கி வளர்ந்த. அம்மான் - எப்பொருட்கும் தலைவன். 'அடியார்க்கு என்றும் தம்மானை' என்க. அடியார்க்குத் தலைவனாய் நின்று அருளுதல் சிறப்பு வகையான் ஆதலின் அதனை வேறெடுத்தோதியருளினார். புரை - உயர்வு; வெண்மை. பூந்துருத்தி, புகலூர் சோழநாட்டுத் தலங்கள். திரை - அலை; அஃது ஆகுபெயராய் நீரைக்குறித்தது.

6. பொ-ரை: படைப்புக் காலத்து விரிந்தவனும், அழிப்புக் காலத்துக் குவிந்தவனும், வேதத்தின் வித்தானவனும், பரந்த பிறப்பும் இறப்பும் ஆகி நின்றவனும், சலந்தரன் உடல் இருகூறாய் வேறாக அரிந்தவனும், ஆழ்கடலிலிருந்து தோன்றிய நஞ்சையுண்டு இமையோரெல்லாரும் உய்ய அருள்புரிந்தவனும், பலவாகிய அசுரர்கள் வாழ்புரங்கள் மூன்றையும் பாழ்படுத்தற்கு மலையாகிய வில்லில் பாம்பாகிய நாணை ஏற்றித் திருமாலாகிய அம்பைத் தெரிந்து எய்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.

கு-ரை: விரிந்தது - படைப்புக் காலத்திலும், குவிந்தது அழிப்புக் காலத்திலும் என்க. 'விரிந்தனை குவிந்தனை விழுங்குயிர் உமிழ்ந் தனை"