| 2940. | பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம் | | | பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத் | | | தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை | | | வாட்போக்கி யம்மானை யெம்மா னென்று | | | வாரமதாம் அடியார்க்கு வார மாகி | | | வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ் | | | சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய | | | திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 4 |
| 2941. | வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை | | | வானவர்க்கும் வானவனை மணியை முத்தை | | | அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த | | | அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும் | |
4. பொ-ரை: முழுப்பூமியும், விசும்பும், பாதாளமும் ஆகிய மூவுலகங்களாய் நின்ற மிக மேலானவனும், வண்டுகள் மொய்க்கும் குழலினையுடைய உமையம்மையைப் பாகத்திற்கொண்ட ஆரமுதம் போன்றவனும், அழகிய தில்லையிடத்து ஆடும் கூத்தனும், வாட் போக்கித் திருத்தலத்துத் தலைவனும், எம் தலைவன் என்று பாராட்டி அன்பு கூரும் அடியார்பால் அன்புடையவனும், வஞ்ச மனத்தார்க்கு என்றும் வஞ்சனும், சிறந்த அரசனும் ஆம் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக. கு-ரை: "பார் முழுதாய் விசும்பாகிப் பாதாளமாம்" என்றது, 'மூவுலகமாய் நின்றவன்' என்றபடி. பரம்பரன் - மிகமேலானவன். 'வாட்போக்கி' என்னுந்தலத்திற்குப் பிற்காலத்தில் இப்பெயரே சொல்லப்படினும், சுவாமிகள் காலத்தில், 'ஆட் போக்கி' என்ற பெயரே சொல்லப்பட்டது எனக் கருத இடம் உண்டு; இத்தலம் சோழ நாட்டில் உள்ளது. வாரம் - அன்பு, சீர் அரசு - சிறந்த அரசன். 5. பொ-ரை: மலையில் தங்கி வளர்ந்த இளமங்கையைப் பங்கில் ஏற்றவனும் தேவர்க்குத் தேவனும், மணி போன்றவனும், முத்து அனையானும், அரையிற் பொருந்திய புலித்தோல் மேல் பாம்பைக் கட்டிய தலைவனும், அடியார்க்கு என்றுந் தலைவனாய் நின்று அருளுபவனும், வெள்ளிதாய் உயர்ந்த கோவணத்தை அணிந்த புனிதனும், பூந்துருத்தி
|