பக்கம் எண் :

193
 

மகனாகிய முதல் பராந்தக சோழர் ஆவர். இதற்குக் கல்வெட்டு ஆதராம் இல்லை. ஆனால் இருபத்தொன்று இதழ்கள் அடங்கிய 'செப்புப் பட்டயம்' ஒன்று உண்டு. அதில் முதல் ஐந்து இதழ்கள் வட மொழியிலும், ஏனைய பதினாறு இதழ்கள் தமிழிலும் இருக்கின்றன. இதில் வடமொழியில் உள்ள பகுதி மிக முக்கியமானது. ஏனெனில் பிற்காலச் சோழமன்னர்களின் வம்சாவளியை அது குறிப்பிடுகின்றது. 1இந்தச் செப்புப்பட்டயம் முதலாம் இராஜேந்திர சோழன் (அ) கங்கைகொண்டசோழனின் இருபத்து மூன்றாம் ஆண்டில் ஏற்பட்டதாகும். அச்செப்பேடு நாகபட்டினத்தில் கடாரத்தரசனால் கட்டப்பெற்ற புத்தவிகாரத்திற்கு ஆனைமங்கலம் என்ற ஊரைப் பள்ளிச்சந்தமாகக் கொடுக்கப்பட்டதை உணர்த்துகின்றது2. பள்ளிச்சந்தம் என்பது சமண புத்த கோயில்களுக்கு அளிக்கப்பெற்ற நிவந்தமாகும். இந்தச் செப்பேடு இதுபொழுது ஹாலண்டு தேசத்திலுள்ள லெய்டன் பல்கலைக் கழகத்து மியூசியத்தில் இருக்கின்றது. இச் செப்பேட்டில் ஆதித்தசோழன் மகனாகிய முதல் பராந்தகசோழன் வியாக்கிர அக்கிரகாரத்திலுள்ள கோயிலைப் பொன்வேய்ந்தான் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. இதன்பிறகு முதற் குலோத்துங்க சோழனின் (கி. பி. 1070 - 1120) திருத்தங்கையார் இராஜராஜன் குந்தவை, ஆழ்வார் தில்லைநாயகர்தம் கோயில் எல்லாம் செம்பொன் வேய்ந்தாள், இச்செய்தியை,

"நானிலத்தை முழுதாண்ட ஜயதரற்கு

நாற்பத்து நாலாண்டில்

மீனநிகழ் நாயற்று வெள்ளிபெற்ற

உரோகணிநாள் இடபப்போதால்

தேனிலவு பொழிற்றில்லை நாயகர்தங்

கோயிலெல்லாம் செம்பொன் மேய்ந்தா

ளேனவரும் தொழுதேத்தும் ராசராசன்

குந்தவைப் பூவிந்தையாளே."

என்னும் முதற் பிராகாரத்து வடபுறச் சுவரில் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டுப் பாடலால் அறியலாம். அதன்பின் திருமழபாடியில் உள்ள விக்கிரமசோழனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டுப் பகுதி அவன்


1. The large Leiden Grant என்ற செப்புப் பட்டயம்

2. "He (Paranthaka) the beacon of the Solar race decked the temple of the moon crested at the Vyaghra Agraharavillage with pure gold brought from all regions conquered by the valour of his own arm" என்பது ஆங்கில மொழி பெயர்ப்பு. [Epigraphia Indica]