| 2634. | பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப் | | | படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை | | | நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை | | | நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கட் | | | கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங் | | | காரணனை நாரணனைக் கமலத் தோங்கும் | | | புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் | | | போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | 9 |
| 2635. | இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும் | | | எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை | | | அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம் | | | அலைகடலில் ஆலால முண்டு கண்டங் | |
9. பொ-ரை: எல்லாப் பொருள்களையும் ஆக்கியவனாய்ப் பார்வதிபாகனாய், பரவிய சடையிலே கங்கையை மறைத்தவஞ்சகனாய், எனக்குத் துணையாய் உடன் நின்று என்னைத் திருத்தித் தன்னிடத்தினின்றும் நீங்காது அணைத்துக்கொண்டவனாய், நான் மறையின் சிறந்த பொருளாய், குளிர்ந்த வெண்பிறையை முடிமாலையாகச் சூடியவனாய், விரைந்து செல்லும் காளையை இவர்ந்த உலக காரணனாய், நாரணனாய், தாமரையில் தங்கும் பிரமனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே. கு-ரை: பண்ணியன் - (எல்லாவற்றையும்) ஆக்கியவன். "படிறன்" என்றது. கரந்தமைபற்றி. நண்ணியன் - (எனக்குத் துணையாய்) உடன் நின்றவன். என் ஆக்கி - என்னைத் திருத்தி. தன் ஆனானை - தன்னினின்றும் நீங்காது அணைத்துக் கொண்டவனை. (ஆனாமை, நீக்காமை.) நளிர் - குளிர்மை. கண்ணி - முடியிலணியும். மாலை. காரணன் - முதல்வன். கமலத்து ஓங்கும் புண்ணியன், பிரமன்; "நாரணன்காண் நான்முகன்காண்" என்னும் திருத்தாண்டகக் குறிப்புக் காண்க. (ப.8 பா.3) 10. பொ-ரை: இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய நரம்பின் இசை கேட்டு மகிழ்ந்தவனாய், அடியார்களுடைய கொடிய நோய்களையும் தீவினைகளையும் போக்கியவனாய், அலைவீசும் கடலின் விடமுண்ட நீல விடமுண்ட நீல
|