பக்கம் எண் :

894
 
கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங்

காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை

பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

10

திருச்சிற்றம்பலம்


கண்டனாய், நெற்றிக்கண் தீயினால் மன்மதனுடைய உடலை எரித்தவ னாய், தீப்பொறி கக்கும் மழுப்படையையும் மானையும் அழகிய கைகளில் கொண்டவனாய், உள்ளபுள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

கு-ரை: 'பத்தும் இறுத்தானை' எனவும், 'அருநோய் பாவம் அறுத்தானை' எனவும் கூட்டுக. இறுத்தல் - நெரித்தல். இதனுள்ளும், அருநோயும் பாவமும் அறுத்தல் அருளப்பட்டது: "வெந்தறும் வினையும்நோயும்" எனத் திருநேரிசையிலும் (தி.4. ப.77.பா.4.) அருளிச்செய்தார். கலை - மான். பொறுத்தான் - தாங்கினான்.

திருத்தொண்டர் திருவந்தாதி

நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதந்தன் சென்னிவைக்கப்

பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்

உற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத்

துற்றவன் ஆமூரில் நாவுக் கரசெனுந் தூமணியே.

மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்

திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற்

பிணியன கன்மிதப் பித்தன சைவப்பெரு நெறிக்கே

அணியன நாவுக் கரையர் பிரான்றன் அருந்தமிழே.

-நம்பியாண்டார் நம்பி.