| 2639. | வானத்தார் போற்றும் மருந்தே போற்றி | | | வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி | | | ஊனத்தை நீக்கும் உடலே போற்றி | | | ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி | | | தேனத்தை வார்த்த தெளிவே போற்றி | | | தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி | | | கானத்தீ யாட லுகந்தாய் போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 4 |
| 2640. | ஊராகி நின்ற உலகே போற்றி | | ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி | | பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி | | பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி |
4. பொ-ரை: தேவர் போற்றும் அமுதமாய், வந்து என் உள்ளம் புகுந்தவனாய், உயிர்களின் குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய், ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய், தேனை வடித்த தெளிவு போல்பவனாய், தேவர்களுக்கும் தேவனாய், சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பியவனாய் உள்ள கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல. கு-ரை: மருந்து - அமுதம். ஊனம் - குறை. உடலே - திருமேனியை உடையவனே; இறைவனது திருமேனி உயிர்களின் குறையை நீக்கும் அருளுருவமாதல், "வேகியா னாற்போல் செய்த வினையினை வீட்டல் ஓரார்", "மூன்றும் நம்தம் - கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே" என்பவற்றால் (சிவஞானசித்தி. சூ. 1.50,55.) விளங்கும். அழலாய் நிமிர்ந்தது, அயன் மால்கட்கு. "ஓங்கி நிமிர்ந்தாய்" என்பது ஒரு பொருட் பன்மொழி. தேனதனை என்பது தேனத்தை என மருவி நின்றது. அது, பகுதிப் பொருள் விகுதி. வார்த்த - வடித்த. தெளிவே - தெளிவு போன்றவனே, "வார்த்தை" என்னும் பெயரெச்சம், "தெளிவு" என்னும் செயப்படுபொருட் பெயர் கொண்டது. "தேவர்க்கும்" என்னும் உம்மை சிறப்பு. கானம் - காடு. ஈமக்காடு. 5. பொ-ரை: ஊர்களாகவும் உலகமாவும் பரவியவனே! அனற் பிழம்பாய் ஓங்கி உயர்ந்தவனே! புகழ் வடிவினனாய் எங்கும் பரவியவனே! நீங்காது என் உள்ளத்தில் புகுந்தவனே! நீர் நிறைந்த ஓடைபோலக் குளிர்ச்சி
|