| நீராவி யான நிழலே போற்றி | | | நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி | | | காராகி நின்ற முகிலே போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 5 |
| 2641. | சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி | | | தேவ ரறியாத தேவே போற்றி | | | புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி | | | போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி | | | பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி | | | பற்றி யுலகை விடாதாய் போற்றி | | | கல்லுயிராய் நின்ற கனலே போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 6 |
தருபவனே! ஒப்பற்றவனே! கார்முகில் போல அருளவல்லவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல. கு-ரை: ஊராகி - பல ஊர்கள் வடிவமாகி. பேர் (பெயர்) - புகழ். 'புகழ் வடிவில் எங்கும் பரவினாய்' என்றருளியதாம்; நீராவி - நீரினின்றும் வெப்பத்தால் எழுகிற ஆவி. 'நீரின் கண் ஆவியாயும் நிழலாயும் உள்ளவனே' என்க. நீரினுள் நிழலாவது, நீர்வாழ் உயிர் முதலியவற்றின் நிழல்; இது பிரிந்து தோன்றாது நீரினுள் கலந்தே நிற்பது. "நீர் நிழல் போல் இல்லா அருவாகி நின்றானை" (சிவஞானபோதம் சூ. 8. அதி. 2.) என்னும் வெண்பாவையும், அதன் உரையையும் நோக்குக. நேர்வார் - நிகராவார். காராகி நின்ற - கருமை நிறம் பெற்று நின்று. 6. பொ-ரை: முதற்கண் சில வேறு தேவர்களாய் நின்று அருள் வழங்கிப் பின் அத்தேவர்களும் நீ ஒருவனேயாகி ஒன்றி நின்றவனே! தேவர்களும் அறிய முடியாத பெரிய தேவனே! புல்லாகிய ஓரறிவு உயிருக்கும் வாழ்க்கை வழங்கியவனே! நீங்காது என் உள்ளத்துப் புகுந்தவனே! உலகுகள் தோறும் பல உயிர்களாக நின்றபவனே! உலகைப் பற்றி அதனைக் கைவிடாதவனே! கல்லின் கண்ணும் உள்ள உயிர்களாய் நிற்கும் ஒளிப்பொருளே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
|