பக்கம் எண் :

903
 
2642.பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி

பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி

எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி

என்சிந்தை நீங்கா இறைவா போற்றி

விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி

மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி

கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

7

கு-ரை: சில் உருவாய்ச் சென்று - முதற்கண் சிலவேறு தேவர்களாய் வேறுவேறு அருளைவழங்கி நடந்து. திரண்டாய், பின்னர் அத்துணைத் தேவர்களும் நீ ஒருவனேயாய் ஒன்றி நின்றவனே. 'அத்தேவர்களாலும் அறியப்படாத தேவனே' என்க. சிவபிரான் இவ்வாறு நிற்கும் நிலையை, "அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்தவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து" (தி. 7. ப.55. பா.9.) எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் - தேற்றனே தேற்றத் தெளிவே" (தி.8 திருவா. சிவபுரா. 81. 82.) என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தமை காண்க.

புல் உயிர் - புல்லாகிய உயிர்; இதுவே உயிர்களுட்கடைப் பட்டதாதலை, "புல்லும் மரனும் ஓரறி வினவே" (தொல். பொருள் - 583) எனவும், "புல்லாகிப் பூடாய்" (தி.8 திருவா. சிவபு.26) எனவும், வந்தனவற்றால் அறிக. பூட்சி - பூண (மேற்கொள்ள) ப்படுவது; வாழ்க்கை; அது, தனு கரண புவன போகங்களையும், இன்பத் துன்பங்களையும், யான் எனது என்பனவற்றையும் கொண்டு நிற்றல். "பார்' என்றது, 'உலகம்' என்னும் பொருளது, அதனைப் பற்றுதலும், விடாமையும் அருள் காரணமாக என்க. கல் உயிர் - கல்லின் கண் உள்ள உயிர்; கல்லின் கண்ணும் உயிர்கள் உள்ளன என்பது, தேரை காணப்படுதல்பற்றி அறியப்படும்; எனவே, "கல்லாய் மனிதராய்" (தி.8 திருவா. சிவபு-28) என்பதிலும், 'கல்' என்னும் பெயர் அதன்கண் உள்ள உயிர்மேல் நின்றமை பெறப்படும். "கனலே" என்றது, 'ஒளிப் பொருளே' என்றவாறு. இவ்வாறு அருளிச் செய்தது, கல்லினுள்ளும் கதிரவன் ஒளி, ஊடு சென்று ஆங்கு நுண்ணுயிர்களைக் காத்தல் பற்றி யென்க.

7. பொ-ரை: பண்ணின் இசையாகி இருப்பவனே! உன்னைத் தியானிப்பவரின் பாவத்தைப் போக்குபவனே! எண்ணும் எழுத்தும் சொல்லும்