பக்கம் எண் :

1148
 
854. நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை

நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்

தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத்

தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை

வானிடை மாமதியை மாசறு சோதியனை

மாருத மும்மனலும் மண்டல மும்மாய

கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ

கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.

3


முன்னே வைத்துரைக்க. 'ஓதலுணர்ந்து' என்றதில் உணர்தல், அடியாரிடமிருந்து கற்றல். "பெருமைக்கு" என்றது, உருபு மயக்கம். "நீ ஆதல்" என்றது, ஆன்மாச் சிவமாம் நிலையை. இனிய இசையைப் பாடி அடியவர் சிவமாந் தன்மையைப் பெறுகின்றார் என்க.

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள்.

- திருக்குறள் - 1106

என்றாற்போல்வதே இறையனுபவமும் ஆதலின், தொழுந்தோறும் உயிர்இன்புற, அன்பு பெருகுவதால் அறிக. கனவிற் கண்ட காளை வடிவினனை, நனவிற் படர்க்கையாக அருளிச்செய்து காதலுற்றுச் செல்கின்றவர் பெரிதும் முறுகி எழுந்த காதலால், இடையே அவனை எதிர் பெய்துகொண்டு, முன்னிலையாக இதன்கண் அருளிச் செய்தார் என்க.

3. பொ-ரை: நான் உடைமையாகப் பெற்றுள்ள செல்வம்போல எனக்கு நன்மையைத் தருகின்ற மேலானவனும், தன்னையே வீடு பேறாக உணர்பவரது சொல்நிலையில் நிறைந்து நிற்கும் மங்கல குணத்தினனும், தேனிடத்தும், அதன் தெளிவிடத்தும் உள்ள சுவை போல்பவனும், தேவர்களுக்குத் தலைவனும், பூக்கள் உயர்ந்து தோன்றுகின்ற முடியை உடையவனும், வானத்தில் உள்ள சிறந்த சந்திரனும், குற்றம் அற்ற ஒளியையுடைய கதிரவனும், காற்றும், தீயும், நிலமும் ஆகி நிற்பவனும் ஆகிய மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, 'திருக்கானப்பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவத்தினனாகிய பெருமானை, 'காட்டில் சிறந்தநடனம் ஆடுபவன்' என்று சொல்லித் துதித்துத் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!

கு-ரை: சொல் நிலையில் நிறைந்திருத்தல், அவர்களது உணர்விற்கு அகப்பட்டு விளங்கிச் சொல்லாற் சொல்ல நிற்றலாம். உணராதார்க்கு உணர வாராமையை,