855. | செற்றவர் முப்புரமன் றட்ட சிலைத்தொழிலார் | | சேவக முந்நினைவார் பாவக முந்நெறியும் | | குற்றமில் தன்னடியார் கூறு மிசைப்பரிசும் | | கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும் | | மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை | | மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக் | | கற்றன வும்பரவிக் கைதொழ லென்று கொலோ | | கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. | | 4 |
"அதுபழச் சுவைஎன அமுதென அறிதற் கரிதென எளிதென அமரரும் அறியார்" என்றும், உணர்ந்தவர்க்கு உணரவருதலை, "இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு" என்றும் அருளிச்செய்தவாற்றால் அறிக. (தி. 8 திருவா - திருப்பள்ளி. 7) "அமுது" என்றது, 'சுவை' என்னும் அளவாய் நின்றது. "தெளிவு" என்றதும் ஆகுபெயரால், அதன் சுவையையே என்க. "சோதி" என்றது, அதனையுடைய கதிரவனை. பூதங்களின் வேறாதல் தோன்ற, மதியையும் கதிரையும் வேறாகவும், மாருதம் முதலியவற்றின்பின், "ஆய" என எச்சமாகவும் ஓதினாரேனும் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. இனி, 'மாருதம் முதலியவை மாய்ந்தொழிந்தகாலைக் கானிடை நடனம் ஆடும் பெருமான் என்று சொல்லித் துதித்து' என உரைப்பினும் அமையும். 4. பொ-ரை: மிக்க நீரையுடைய வயல்கள் சூழந்த, 'திருக்கானப்பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை, அவனது, பகைத்தவரது முப்புரங்களை அன்று அழித்த, வில்தொழில் பொருந்தி வீரத்தையும் தன்னை நினைவாரது நினைவின் வண்ணம் நிற்கும் நிலையையும், அவர்களை நடத்துகின்ற முறையையும், குற்றமில்லாத அவனது அடியார்கள் சொல்லுகின்ற புகழின் வகைகளையும், அரையில் உடுக்கின்ற கோவணமும், பட்டும், தோலும் ஆகிய உடைகளையும், வலிமை விளங்குகின்ற திண்ணிய தோள்களையும், நீறு செறிந்த மார்பின்கண், பெருமையையுடைய
|