என்று அருளியுள்ளமை அறிந்தின்புறத்தக்கது. புகழ்த்துணை நாயனார்: 1 செருவிலிபுத்தூரில் ஆதிசைவர் குலத்தில் புகழ்த்துணை நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவாகமப்படி அருச்சனை புரிந்து வந்தார். ஒருகாலத்தில் பஞ்சம் உண்டாயிற்று. பசி வருத்தியது. அதனாலும் நாள்தோறும் அருச்சனையை நிறுத்தாதவராய் வழிபாடு புரிந்து வந்தார். ஒருநாள் வழிபாட்டில் திருமஞ்சன மாட்டும்பொழுது கைசோர்ந்து கலசந் திருமுடியில் விழ, தான் திருவடியிலே விழுந்து அயர்ந்து நித்திரை அடைந்தார். அவரது கனவில் 'பஞ்சம் நீங்கும்வரை நாள்தோறும் உனக்கு ஒரு காசு வைப்போம்' என்று அருளி ஒரு காசு வைத்தருளினார். துயில் எழுந்து பார்த்து வியந்து, பெற்று மகிழ்ந்தார். அவ்வாறே நாள்தோறும் காசு பெற்றுத் திருத்தொண்டு செய்து, வறுமை நீங்கிய பின்னும் திருத்தொண்டு புரிந்து திருவடி அடைந்தார். இவ்வரலாற்றை, அகத்தடிமை செய்யும் அந்தணன்றான் | அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான் | மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும் | முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும் | வகுத்தவனுக்கு நித்தற்படியும் | வரும்என்றொருகாசினை நின்றநன்றிப் | புகழ்த்துணை கைபுகச் செய்துகந்தீர். | (தி. 7 ப. 9 பா. 6) |
என்று நாயனார் அருளியுள்ளமை குறிக்கொளத்தக்கது. மூர்க்க நாயனார்: 1 தொண்டை நாட்டில் திருவேற்காட்டில் வேளாளர் குலத்தில் தலைசிறந்தவராக ஒருவர் விளங்கினார். அவர் தினந்தோறும் சிவனடியார்களைச் சிவனென வணங்கித் துதித்து திருவமுது செய்வித்த பின்பே தாம் உண்டு அவர்கள் விரும்பும் பொருள்களையும் கொடுத்து வாழ்ந்தார். அதனால் பொருள் முழுவதையும் இழந்தார். மாகேஸ்வர பூசை முதலியவற்றிற்குப் பொருள் இல்லாமையால், தான் முன்னமே பயின்ற சூதினாலே பொருள் சம்பாதிக்க எண்ணினார். ஆயினும்
1. தி. 12 பெரிய புராணம்.
|