பிராமணர்களோடு நமது சந்நிதியை அடைவாய்' என்று அருளி, தில்லைவாழ் அந்தணர்களுக்கும் திருநாளைப் போவாருக்காக நெருப்பை வளர்க்குமாறு கட்டளையிட்டருளினார். அவர்களும் அவ்வாறே மறுநாள் விடியலில் திருநாளைப் போவாரிடம் தெரிவித்துத் தென்மதிற்புறத்தே கோபுர வாயிலுக்கு எதிரில் தீ வளர்த்தனர். திருநாளைப்போவாரும் கூத்தப்பெருமானின் திருவடியைத் தியானித்து அதனுள் புகுந்து, அத்தேகத்தை விட்டுப் பிராமணமுனி வடிவங்கொண்டு சடைமுடியோடும் எழுந்து கனகசபையை அடைந்து மறைந்தார். இவர் பற்றிய குறிப்பை, "நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் | நாவினுக் கரையன் நாளைப்போவானும் | கற்றசூதன்நற் சாக்கியன் சிலந்தி | கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள் | குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் | கொள்கை கண்டு நின்குரை கழலடைந்தேன்" | (தி. 7 ப. 55 பா. 4) |
என்ற திருப்பாடலில் காண்க. நரசிங்கமுனையரைய நாயனார்: 1 திருமுனைப்பாடி நாட்டிலே குறுநில மன்னராய் விளங்கிய நரசிங்கமுனையரையர் திருநீறே தமக்குப் பெருஞ்செல்வம் என்று எண்ணி வாழ்ந்தார். அவர் உலகமக்கள் எல்லோரும் சைவத்தைப்பற்றி வாழவேண்டும் என்ற பெருங் கருணைகொண்டு பகையை வென்று அரசாண்டார். சிவனடியார்களின் திருவடியடைதலே பேறு என்று கருதி திருவாதிரை நட்சத்திரந்தோறும் சிறப்பு வழிபாடு செய்வித்தும், அடியார்களுக்குத் திருவமுது செய்வித்தும் அவர்களுக்குத் தனித்தனியே நூறுபொன் கொடுப்பார். அவ்வாறு செய்யும்பொழுது பொய் வேடம் பூண்டு வந்த ஒருவரை அடியார்கள் ஒதுக்க, அதைக் கண்ட அரசன் அவரைத் தனியே அழைத்துச்சென்று உபசரித்து இன் சொற் சொல்லி இருநூறு பொன் கொடுத்து அனுப்பினார். இவ்வாறு திருத்தொண்டு செய்திருந்து திருவடியடைந்த இவர் குறித்து நாயனார், "நாதனுக்கூர் நமக்கூர்நர சிங்கமுனை யரையன் ஆதரித்தீசனுக் காட்செய்யும் ஊர்அணி நாவலூர்" (தி. 7 ப. 17 பா. 11)
1. தி. 12 பெரிய புராணம்.
|