வகுத்தவனுக்கு நித்தற் படியும் | வரும் என்றொரு காசினை நின்ற நன்றிப் | புகழ்த்துணை கைபுகச் செய்துகந்தீர் | பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே. | (தி. 7 ப. 9 பா. 6) |
கச்சி அனேகதங்காவதம் : அனேகதங்காவதம் என்ற பெயரில் இரு தலங்கள் உள்ளன. ஒன்று இமயமலைச் சாரலில் கேதாரத்திற்கு ஏழு கல் தொலைவில் கீழே இருப்பது. இதைக் கௌரிகுண்டு என்றும் போற்றுவர். இங்கு சூரியனும் சந்திரனும் பூசித்துப் பேறுபெற்றனர். இதனை ஞானசம்பந்தர் பாடியுள்ளார். அதினின்றும் இதுவேறு என்பதை உணர்த்தவே கச்சி அனேக தங்காவதம் என்று இத்தலம் பெயர் பெற்றது. இங்கு விநாயகர் பூசித்துப் பேறுபெற்றதாகக் கூறுவர். அனேகதம் என்றால் விநாயகர் என்றும் சொல்கின்றனர். இராஜசிம்மப் பல்லவனாகிய காடவர்கோன் கட்டிய கைலாசநாதர் கோயிலின் அருகில் வயல்வெளியில் இருப்பது இத்தலம். எமதர்மனின் தமராகிய எமதூதர்கள் நம் தமர்களாகிய சிவனடியார்களை வருத்தமுடியாதபடி எமபயத்தை நீக்கும் இடம் என்கிறார் ஆரூரர். மேலும் பிறவித் தளையைப் போக்கி வீடுபேறளிக்கும் சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு என்கிறார். அப்பாடல் காண்க. "தண்டமுடைத் தருமன் தமர் என்தமரைச் | செய்யும் வன்துயர் தீர்க்கும் இடம் | பிண்டமுடைப்பிறவித் தளை நின்று | நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம்" | (தி. 7 ப. 10 பா. 6) |
மேலும் "கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுதேத்தும் இடம்" (தி. 7 ப. 10 பா. 7) என்றும் குறித்துள்ளமை காண்க. இவரலாது இல்லையோ பிரானார் : திரு ஆனைக்கா அண்ணலை வழிபட்டுத் திருப்பாச்சிலாச் சிராமம் என்னும் தலத்தை அடைந்தார் ஆரூரர். பொருள் வேண்டினார். பெருமானோ பொருள் கொடுக்கவில்லை. தோழர் என்ற முறையில் இருபொருள்பட "இவரலாது இல்லையோ பிரானார்" என்று பாடினார். இவரல்லாது வேறு தலைவர் இல்லையோ? இவர் கொடுக்காவிட்டால் வேறு தலைவரிடம் பெறுவேன் என்னும் கருத்துபடப் பாடினார். ஆயினும் உண்மை அதுவன்று. இவரலாது நமக்குப்பிரானார் வேறு இல்லை என்பதே
|