பக்கம் எண் :

327
 

ளது. வீரசேகர காடவராயன் (1186) அதியமான் நாட்டையும் கடலையும் அழித்ததாகக் கூறும் கல்வெட்டுச் செய்தியொன்று உள்ளது.

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களுள் பரகேசரிவர்மன், முதலாம் இராஜராஜன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், திரிபுவனச் சக்ரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் முதலானோர் காலங்களிலும், பாண்டியர்களில், வீரபாண்டியதேவன், கோனேரின்மை கொண்டான் விக்கிரம பாண்டிய தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் விக்கிரம பாண்டிதேவன், மாறவர்மன் பராக்கிரம பாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், முதலானோர் காலங்களிலும், விஜயநகர அரசர்களில், வீரவிஜய மகாராயர் மகனாகிய பிரதாபதேவ மகாராயர், புக்கண்ண உடையார் மகனார் கம்மப்பண்ண உடையார், வீரவிசுவராய மகாராயர் மகனார் காத்தவராய மகாராயர், முதலானோர் காலங்களிலும், பல்லவர்களில், கோப்பெருஞ் சிங்கதேவர் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இதுபொழுதுள்ள கற்றளி, பெரிய சோழராகிய பராந்தக தேவரது மகனாகிய கண்டராதித்த தேவரது மனைவியாரும், மழபெருமான் அடிகளின் மகளாரும், உத்தமசோழதேவரது தாயாருமாகிய செம்பியன் மாதேவியாரால் பரகேசரி வர்மனின் பன்னிரண்டாம் ஆண்டில் கட்டப்பெற்றதாகும். இவ்வம்மையார் இக்கோவிலையன்றி, இக்கோயிலில் உள்ள ஸ்நபநமண்டபம், கோபுரம், சுற்றாலை, பரிவார தேவதைகளுக்குக் கோயில்கள் இவைகளையும் கட்டியுள்ளார்.

இத்திருக்கோயிலில் 1 உள்ள நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியவன் அரசன் நாராயணன் ஆளப் பிறந்தானாகிய வீரசேகர காடவராயனும், திரு மடைப்பள்ளியைக் கட்டியவன் எலிசை மோகனாகிய கச்சிராயனும், உற்சவமூர்த்திக் கோவிலைக் கட்டியவன் வையப்ப கிருஷ்ணம நாயக்கரும், மகாஸ்நபந மண்டபத்தைக் கட்டியவன் ஆளப்பிறந்தான் எலிசை மோகனாகிய குலோத்துங்க சோழ காடவராதித்தனும் ஆவர். இந்த மகா ஸ்நபந மண்டபம் கட்டிய செய்தியைப் பற்றி இராஜகேசரி திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் பதினைந்தாம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது.


1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1900. 1918, 1935, No. 132 - 140, 39 - 92, 94 - 102.