பக்கம் எண் :

341
 

கல்வெட்டு :

1இக்கோயில் கல்வெட்டில் இறைவர் வெஞ்சமாக்கூடல் விகிர்தர் என்னும் திருப்பெயராலும், இறைவியார் பனிமொழியார் என்னும் பெயராலும் குறிக்கப்பட்டுள்ளனர். சுந்தரபாண்டிய தேவராகிய கண்டியதேவர். அம்மன் கோயிலைச் சற்று விரிவாகக் கட்டியும், பழுதுபார்த்தும் உள்ளார். இங்ஙனம் இவர் செய்தது பரகேசரிவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரபாண்டியனின் மூன்றாம் ஆட்சியாண்டில் ஆகும்.

கோனேரின்மைகொண்டான் கல்வெட்டு ஒன்றின் தலைப்பில் ஜெயகேசரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது திருவெஞ்சமாக்கூடல் ஊரையே இறைவர்க்கு அளிக்கப்பட்ட செய்தியை உணர்த்துகின்றது. இந்த வெஞ்சாமாக்கூடல் என்னும் ஊர் வெங்காலநாட்டுக்கு உட்பட்ட ஊர்களில் ஒன்றாகும்.

81. திருவெண்காடு

ஆக்கூரிலிருந்து சீகாழி செல்லும் பெருவழியில் பேருந்து மூலம் அல்லிவிளாகத்தில் இறங்கிக் கிழக்கே 4 . 5 கி. மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை, சீகாழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

இது காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.

இறைவர் : திருவெண்காட்டீசர், சுவேதாரண் யேசர்.

இறைவி : பிரமவித்யாநாயகி.

தீர்த்தம் : முக்குளங்கள் - சூரிய தீர்த்தம், அக்கிநி தீர்த்தம், சந்திரதீர்த்தம்.

இக்குளங்களில் நீராடி வழிபடுகிறவர்கள் பிள்ளைப்பேற்றை அடைவார்கள். அவர்களைத் தீவினைகள் அடையா. இச்செய்திகளை இத்தலத்துக்குரிய


1. See the Annual; Reports on South Indian Epigraphy for the year 1905 No. 143 - 150.