பக்கம் எண் :

340
 

குலோததுங்கன் தமது ஆட்சி முப்பத்து நான்காம் ஆண்டில் சண்டேஸ்வரப் பிரதிஷ்டை செய்வித்து நித்திய பூசைக்கு ஏற்பாடு செய்தான் 1. சிறந்த செய்தியொன்று வாணியின் பாதனான அரிகுலகேசரி விழுப்பரையனால் 'ஸ்ரீ காலகாலன் என்னும் வாள், வீழிமிழலை நாதர்க்கு வழங்கப்பெற்றது. 2

3 மாப்பிள்ளைச்சாமி எனப்பெறும் மணவாளத் திருக்கோலப் பெருமான் அழகிய மணவாளப்பெருமான் என்று குறிக்கப் பெறுகின்றார். இந்த மூர்த்தியையும், இராஜேந்திர சோழ அணுக்கப் பல்லவரையர் புதுக்கிப் பிரதிட்டை செய்ததாகத் தெரிகிறது.

திருவாவடுதுறை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.

80. திருவெஞ்சமாக்கூடல்

இவ்வூரை வெஞ்சமாங்கூடலூர் என்று மக்கள் வழங்குகின்றனர்.

வெஞ்சன் என்னும் அசுரராசனுக்கு இராசதானி ஆதலால் இப்பெயர் எய்தியது என்றும், வெஞ்சன் என்னும் அசுரன் பூசித்த தலமாதலால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கரூரிலிருந்து இருபது கி. மீ. தொலைவில் சிற்றாதன் கீழ்க்கரை மேலுள்ளது. இக்காலம் பேருந்து வசதி உண்டு.

சிவபெருமான், தம்மிடம் பற்று உடைய ஒரு கிழவியிடம் தம் பிள்ளைகளை ஈடுகாட்டிப் பொன் வாங்டிகச் சுந்தரர்க்குக் கொடுத்தருளிய தலம். இவ்வரலாற்றைக் கொங்கு மண்டலசதகத்தில் 'கிழவேதிய வடிவாகி எனத் தொடங்கும் பாடலில் காணலாம்.

இறைவர் : - விகிர்தேசுவரர். இத்திருப்பெயரை ஒவ்வொரு பாடல்தோறும் காண்க.

இறைவி : - விகிர்தேஸ்வரி,


1. 427 of 1908,

2.438 of 1908.

3. 444 of 1908.