ஐந்து தமிழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின் உள்சுவரில் சகம் 1108 அதாவது கி. பி. 1186 இல் சில பாடல்கள் அரசுநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயர் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அவை காடவராயர் குடும்பத்தைப் பற்றிய செய்திகளாகும். இக்கோயிலில் ஆட்கொண்ட தேவர் பாலாடியருள் பசுக்கள் விடப்பட்டிருந்தன. பசுக்களை விட்டவர்ரிஷபம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்பசுக்கள் சுரபி மன்றாடிகளிடம் விடப் பட்டிருந்தன. அவர்கள் அப்பாலை அருமொழிதேவன் நாழியால் தவறாது அளந்து வந்தனர், சுரபி மன்றாடிகள் - பசுக்களைப் பாதுகாக்கும் இடையர். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன், ஆனைக்கு அரசு வழங்கும் பெருமாள்தோப்பு என்னும் தோப்பைத் திருக்கோயிலுக்கு விட்டிருந்தான். அது 12 மா நிலப்பரப்புள்ளது. மேலும் இவன் சீழகம் பட்டில் கோப்பெருஞ்சிங்கன் தோப்பு என்னும் பெயருள்ள தோப்பு ஒன்றையும் விட்டிருந்தான். சோழமண்டலத்தில் விக்கிரம சோழவள நாட்டில் திருப்பழனம், வடகுரங்காடுதுறை முதலான ஊர்கள் விறைக் கூற்றத்தைச் சேர்ந்தன. விறைக்கூற்றம் என்பது விறை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டது. அந்த விறை என்னும் ஊர்க்கு அகளங்கபுரம் என்னும் வேறு பெயர் உண்டென்பதை இக் கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது. அவ்வூரில் உள்ள ஒருவன் தடுத்தாட்கொண்ட தேவர்க்கு விளக்குக்கும் விழாவிற்கும் 120 காசு கொடுத்துள்ளான். பட்டுடையான் : 'இந்நாளில் இப்படி செலுத்துவேனாய் இப் பொன்கொண்டேன், இத் தளிப்பட்டுடையான் ஈஸ்வரக்காணி வாழதேவன் திருவெண்காடனேன்' 1 என்னும் கல்வெட்டுப்பகுதியில் பட்டுடை யான் என்ற தொடர் வந்துள்ளது. இதற்கு இதுவரை Priest என்றே பொருள் கொள்ளப் பட்டது. ஆனால் இந்த ஆட்கொண்ட தேவர் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில் கண்ட "ஆட்கொண்டதேவர் கோயிற் பூசையும் சைவா சாரியஞ் செய்து வருகிற பட்டுடையார்களையும் தவிர", என்னும் 2 கல்வெட்டுப்பகுதியால் பட்டுடையார் என்பது சைவாசாரியம் மட்டும் செய்வாரைக் குறிக்கும் என்பது தெற்றெனப்
1. S.I.I Vol. Part III No. 94. p. 227. 2 S.I. VoL. VII No. 944.
|