பக்கம் எண் :

349
 

பெறப்படுகின்றது. எனவே பட்டுடையார் என்பது கோயிற்பூசை செய்வாரைக் குறிக்காது.

"இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு" முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வூர், திருவெண்ணெய்நல்லூர் என்றும், கோப்பரகேசரிபன்மரான உடையார் இராஜேந்திரதேவர் கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்னும், இரண்டாம் இராசாதிராசன் காலம் முதல் பின்னுள்ளோர்காலம்வரை இராசராச வளநாட்டுத் திருமுனைப்பாடி திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளது.

83. திருவெண்பாக்கம்

இது தொண்டை நாட்டுத்தலங்களுள் ஒன்று. வெவ்வளூர் நிலையத்துக்கு பதினோரு கி. மீ. தொலைவில் இருக்கின்றது. இவ்வூர்ப் பதிகத்தில் 'உளோம் போகீர்' என்று வருவதால் இப்பக்கத்தவர் இவ்வூரை உளம்பூதூர் என்றே கூறுவர். சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் வசதியின் பொருட்டு இக்கோயில் அடியோடு பெயர்த்து வேறு ஒரு இடத்தில் வைத்துக்கட்டப்பட்டுள்ளது.

இவ்வூரின் பெயர் வெண்பாக்கம் ஆயினும், இங்குள்ள கோயிலின் பெயர் வெண்கோயில் என்பதாகும். இது இவ்வூர்ப் பதிகத்தில் பத்தாம் திருப்பாட்டில் 'வெண்கோயில் இங்கிருந்தாயோ என்ன' என்னும் சுந்தரமூர்த்திசுவாமிகளின் திருவாக்கால் அறியக்கிடக்கின்றது.

ஒற்றியூரில் ஊன்றுகோல் அருளுமாறு வேண்டியதற்கு, இத்தலத்தில் அதைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் கொடுத்தருளினார். இச்செய்தி 'ஊன்றுவதோர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே' என்னும் இத்தலத்துத் தேவார அடியால் விளங்கும்.

இறைவர் : ஊன்றீசுரர்.

இறைவி : மின்னலொளியம்மை. சுந்தர மூர்த்தி நாயனார்