பக்கம் எண் :

35
 

செய்தவர்களாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். ஏன் இப்படிச் சிறந்த நாயன்மார்கள் எண்மரைக் குற்றம் செய்தவர் என்று காட்டுகிறார் எனில், தன்னையும் ஆதரித்த பெருமானையுமே குற்றவாளியாகக் கருதியவர் ஏயர்கோன், அவருக்குக் குற்றமில்லாதவர்கள் உலகத்தில் யாவரும் இல்லை. இருப்பினும் பெருமானிடம் பக்தி உள்ளவர்களாயின் அவர்கள் செய்யும் சிறு குற்றங்களைப் பொறுத்துப் படிப்படியாக அவர்களையும் திருத்துவதே இறைஇயல்பு என்பதை ஏயர்கோனுக்கு அறிவித்து அவரும் இவ்வுண்மை உணர்ந்து நலம்பெற வேண்டும் என்றே இங்குக் குறிப்பிட்டார். ஆயினும் ஏயர்கோன் கலிக்காமர் ஏற்றதாகத் தெரியவில்லை. இதற்குமேல் பகை பாராட்டாமல் இருந்தாரே தவிர சேரமான் பெருமாளைப் போல் ஏயர்கோன் சுந்தரரிடம் ஒட்டி உறவாடியதாகத் தெரியவில்லை. இருவரும் திருவாரூர் செல்கின்றனர். அங்கு, சுந்தரர் மாளிகையில் தங்கியிருந்தனர் என்றாலும் சுந்தரரிடம் ஏயர்கோன் மனம் திறந்து பேசியதாகத் தெரியவில்லை.

ஞானசம்பந்தர் செய்த குற்றம் என்ன?

நாவரசர் நாளைப்போவார் முதலான எழுவரும் செய்த குற்றம் மேலோட்டமாக எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் ஞானசம்பந்தர் செய்த குற்றம் தெளிவாகப் புலப்படவில்லை. கைத்தொண்டு செய்யாதது, தமிழ் ஞானசம்பந்தர் என்பனபோன்ற தற்புகழ்ச்சி முதலியன குற்றமாக இருக்கலாம் என்று பலரும் சொல்லிவருகின்றனர். தந்தையார் வேள்விக்காகப் பொருள் கேட்டபோது ஞானசம்பந்தர் நல்வேள்விக்குப் பொருள் நல்குக என்று ஒரு பதிகம் பாடினால் பெருமான் பொன் தந்திடுவார். ஞானசம்பந்தர் தம்நிலையை உணர்ந்து பெருமான் வழங்க வில்லையே என்று சிறிது ஆதங்கப்பட்டுவிட்டார். அதனால்தான் "இதுவோ எமை ஆளுமாறு?". இந்தக் காரியத்திற்குத் கொடுக்கப் பொருள் சிறிதும் உன்னிடம் இல்லையாயின் அதுவோ உனது இன்னருள் என்று உரிமை பற்றிச் சினக்குறிப்புடன் கூறியுள்ளமை புலப்படுகின்றது. சினக்குறிப்பு இல்லையே என்றாலும், "இடரினும் தளரினும் (தி. 3 ப. 4 பா. 1) "நனவிலும் கனவிலும்", "வாழினும் சாவினும் உனை மறவேன்" இப்படி உள்ள என்னை ஆளும் திறம் அதுதானோ என்ற ஞானசம்பந்தர் போன்ற பெருநிலையில் உள்ளவர்கள் வினவுவது உரிமைபற்றிய தாயினும், இப்படியெல்லாம் உள்ளவனாகிய என்னை ஆளும் திறம் இதுதானோ? என்று கேட்பதும் குற்றமுடையதாகத் தோன்றுகிறது. நமது ஞானபிதாவாகிய ஞானசம்பந்தர் மீது குற்றம் கண்டுபிடிப்பது நோக்கமன்று. இறைவனிடம் தம் திறன் அறிவித்துத்