பக்கம் எண் :

36
 

தம்மைக்காவாது இருக்கலாமா? என்று கேட்டிருப்பது குறையாகவே முடிகிறது. இப்பிழையையும் ஞானசம்பந்தர் தவிர்த்திருக்கலாம் அல்லாவா? அதனால் தான் சுந்தரர் ஞானசம்பந்தரையும் குற்றம் செய்தவராகக் குறிப்பிட்டார். அவர் செயல் குற்றமா என்பதை நம்மையும் ஆயும்படியாகச் செய்துவிட்டது. இறைவனைத் தவிர எல்லோரும் குற்றமுடையவர்களே என்பதை உணர்த்தும் வரலாறாக இதனைக்கொண்டு குற்றம் நீங்கிக் குணம் கொண்டு உய்வோமாக.

இன்னதன்மையன் என்று அறியவொண்ணாதவன் :

கொடுங்கோளூரில் சேரமான் பெருமாள் நாயனார் வழிபாட்டை ஏற்றிருந்த சுந்தரர், ஆரூர்ப் பெருமானின் பேரருள் நினைவு வர உலக போகத்திற்குப் பொன்னையும், வீட்டுலகப் பேரின்ப அநுபவத்திற்கு மெய்ப்பொருளையும் தந்தவன், அவற்றை அநுபவித்தற்குரிய பேற்றையும் அவனே அருளவேண்டும் என்றுணர்ந்து போகமும் திருவும் புணப்பானை (தி. 7 ப. 59) என்கிறார். பதினாறு பேறுகளில் நுகர்ச்சி என்பது ஒன்று. பதினைந்து பேறுகளும் இருந்தும் நுகர்ச்சி இன்றெனில் ஒன்றும் இன்றாம். எனவேதான், "புணர்ப்பானை" என்று அருளினார். நுகரும்போது பிழைகள் நிகழும். அவற்றைப் பொறுப்பதோடு அவை மீண்டும் நம்மாட்டு வாராமே தவிரச் செய்பவன் பெருமான் என்கிறார். இவ்வளவு நுட்பமாக இறைவனை அனுபவித்த சுந்தரர், "இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணாதவன் எம்பெருமான்" என்றும் அவனுடைய அளவிறந்த ஆற்றலையும் பெருமையையும் அளவிட இயலாது என்றும் கூறுகிறார். அப்பர் திருவாரூர்த் தாண்டகத்தில் "இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன்" என்று எழுதிக்காட்டவொண்ணாது என்கிறார். இரு பெரியோர்களின் கருத்தும் ஒன்று பட்டுள்ளமை உணர்ந்து உய்திபெறுவோமாக.

திருக்கோலக்கா நிகழ்ச்சி:

"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன்" (தி. 7 ப. 62 பா. 8) கோலக்கா இறைவன் என்பதைக் குறிப்பிடுகின்றார். "அன்று வந்து எனை அகலிடத்தவர்முன் ஆளதாக என்று ஆவணம் காட்டிய" நிகழ்ச்சியை இங்கு அகச்சான்றாகக் காட்டுகிறார்.

இன்பம் பெருக்கும் நம்பி: :

நம்பி என்பது ஆடவருள் சிறந்தாருக்குக் கொடுக்கப்பெறும்