புத்தூரில் நிகழவிருந்த திருமணம் நின்றது. சடங்கவி சிவாசாரியருடைய மகளாரும், நம்பியாரூரரையே மனத்தில் கொண்டு அவரையே நினைந்து சிவலோகத்தை எளிதாய் அடையும் வகையையும் பெற்றுக்கொண்டார். இவ்வாறு நம்பியாரூரர் தம்மை வலிய ஆட்கொண்டருளிய அருட்டுறை இறைவரை இறைஞ்சித் தம்முடைய ஊராகி திரு நாவலூரை அடைந்தார். அங்குக் கோயில் கொண்டருளிய பெருமானைப் பணிந்து செந்தமிழ்ப் பாமாலை பாடிப் போற்றினார். தவநெறி வேண்டுதல் : பின்னர் அருகில் உள்ள திருத் துறையூரை அடைந்து பெருமான் திருமுன் நின்று 'தவநெறி தந்தருள வேண்டும்' என்று விண்ணப்பம் செய்து திருப்பதிகம் பாடினார். பெருமான் சுந்தரர் வேண்டியவாறே தவநெறி தந்தருளினார். தவநெறி வேண்டிப் பெற்ற நம்பிகள் தில்லையில் பொன்னம்பலத்திலே ஆடல் புரிந்தருளும் கூத்தப்பெருமானை வழிபட்டு மகிழ விரும்பினார். திருத்துறையூரை விட்டுப் புறப்பட்டுப் பெண்ணையாற்றைக் கடந்து திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தின் எல்லையை அடைந்தார். திருவதிகையில் திருவடி சூட்டப் பெறுதல் : திருவதிகை திருநாவுக்கரசர் உழவாரத் திருப்பணி செய்யப் பெற்ற தலம். ஆதலால் அதனை மிதித்துச் செல்ல விரும்பாது அருகில் இருந்த சித்தவடம் என்னும் மடத்தில் தங்கினார். உடன் வந்த அடியார்களோடு அதிகை வீரட்டானேஸ்வரரை இடைவிடாது எண்ணிய வண்ணம் துயின்றார். இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்தார். உடனே நம்பியாரூரர் விழித்து எழுந்து "அருமறையோனே! உன் அடிகளை என் தலைமேல் வைத்தனையோ" என்று கேட்டார். "நீர் துயிலும் திசையை அறியாவகை செய்தது என் முதுமை" என்றார் அந்தணர். நம்பிகள் வேறொரு திசையில் தலையினை வைத்துத் துயில்கொள்ளத் தொடங்கினார். மீண்டும் அம்முதியவர் நாவலூரர் தலைமேல் தம் திருவடிகளை நீட்டிப் பள்ளி கொண்டார். நாவலூரர் எழுந்து இவ்வாறு பலதடவை மிதிக்கும் நீர் யார் என்று சினந்து கேட்டார். உடனே முதியவர் "என்னை நீ இன்னும் அறிந்திலையோ" என்று கூறியவாறு மறைந்தருளினார். அம்மொழி
|