பக்கம் எண் :

368
 

மறைந்தார். பின் சென்றார் யாவரும் அவரைக்காணாது திகைத்து நின்றனர். உடன் சென்ற நம்பியாரூரர் 'என்னை அடிமைகொண்ட மறையவர் கோயிலுள் புகுந்து மறைந்தது என்கொலோ' என்று வியப்புற்று அவரைத் தொடர்ந்து சென்று கதறி அழைத்தார்.

அர்ச்சனை பாட்டேயாகும் :

மறையவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெருமான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து 'நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். அப்போது மாதர்பால் மனம் வைத்தாய்; ஆதலால் நம் ஏவலால் மண்ணுலகில் பிறந்தாய். இவ் வுலகியல் வாழ்வு உன்மைத் தொடர்ந்தது வருத்தாவண்ணம் நாமே உன்னைத் தடுத்தாட்கொண்டோம்' என்று உண்மை உணர்த்தி யருளினார்.

நாவலூரர் பெருமகிழ்ச்சியடைந்து தாய்ப் பசுவின் கனைப் பினைக் கேட்டுக் கதறும் கன்றினைப் போல அன்பினால் கதறி, மெய்மயிர் சிலிர்க்கக் கைகளைத் தலைமேல் குவித்து இறைஞ்சினார் மறையவனாய் வந்து என்னை வலிய ஆட்கொண்டதும் அருட் செயலோவென்று நெஞ்சம் நெக்குருகிப் போற்றினார். அந்நிலையில் பெருமான் அவரை நோக்கி 'நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக' எனப் பணித்தருளினார்.

அவ் அருளுரையைச் செவிமடுத்த வன்றொண்டர் 'என்னை வழக்கினால் வெல்ல வேதியனாய் வந்த கோதிலா அமுதே! நாயேன் நினது திருவருட் பண்பாகிய பெருங்கடலுள் எதனைத் தெரிந்து எத்தகைய சொற்களால் பாடுவேன்' என்ற கூறி உளங்கசிந்து நின்றார். அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் பித்தன் என்றே பாடுக' என்று இறைவன் அருளிச்செய்தார். வன்தொண்டர் தம்மை ஆண்டருளிய வள்ளலாரின் பெருங்கருணைத் திறத்தைப் "பித்தா பிறைசூடீ" என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடி யருளினார். இத்திருப்பதிகத்தைச் செவிமடுத்து மகிழ்ந்த 'இறைவன் இவ்வுலகில் இன்னும் இவ்வாறே நம் பொருள் சேர் புகழைப் பாடிப் பரவுக' என்று கூறி மறைந்தருளினார்.

சிவபிரான் வன்றொண்டரைத் தடுத்தாட் கொண்டதால்