பக்கம் எண் :

402
 

என்று குறித்துள்ளார்.

தம்பிரான் தோழராதல் :

திருவாரூர்ப் பெருமான் 'தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்' என்றருளினார். சுந்தரர் தம்பிரான் தோழரானார். இக் குறிப்புப் பல பதிகங்களில் காணப்படுகின்றது.

"தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த
துரிசுகள் பொறுக்கும் நாதனை"

(தி. 7 ப. 68 பா. 8)

"என்னுடைய தோழனுமாய் யான்செய்யும்
துரிசுகளுக்கு உடனாகி"

(தி. 7 ப. 51 பா. 1)

"என்றனை ஆள் தோழனை"

(தி. 7 ப. 84 பா. 9)

பரவையார் திருமணம் :

திருவாரூர்ப் பெருமான் அன்புடைத் தோழராய் நங்கை பரவையாரை வாழ்க்கைத் துணையாகத் தந்தருளியதும், பின் தூது சென்று இருவரிடை சந்து செய்வித்த அருளிப்பாட்டையும் குறிக்கும் அகச்சான்றுகள் பல.

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழையொண்கண் பரவையைத் தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.

(தி. 7 ப. 51 பா. 10)

"தூதனைத் தன்னைத் தோழமையருளித்
தொண்டனேன்செய்த
துரிசுகள் பொறுக்கும் நாதனை"

(தி. 7 ப. 68 பா. 8)

"தூதனை என்றனை ஆள் தோழனை"

(தி. 7 ப. 84 பா. 9)