திருத்தொண்டத்தொகை யருளியது : இறைவனருளால் அடியார்களுக்கு ஆட்பட்ட திறத்தினைக் குறிக்கும் பகுதிகள் : "ஆள்தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டு" (தி. 7 ப. 21 பா. 2) "பண்டே நின்னடியேன் அடியாரடியார்கட் கெல்லாம் தொண்டே பூண் டொழிந்தேன்" (தி. 7 ப. 24 பா. 4) நெல்லிட ஆள்வேண்டிப் பெற்றது : பரவையார் பொருட்டுக் குண்டையூரில் பெற்ற நெல் மலையைத் திருவாரூருக்கு எடுத்து வருதற்பொருட்டுப் பணியாள் வேண்டிப்பெற்ற குறிப்பு கோளிலித் திருப்பதிகத்திலேயே குறிக்கப்பட்டுள்ளது. "கோளிலியெம்பெருமான் குண்டையூர்ச் சிலநெல்லுப் | பெற்றேன் | ஆளிலை யெம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே" | தி. 7 ப. 20 பா. 1 10) |
"பரவையவள் வாடுகின்றாள்" (தி. 7 ப. 20 பா. 8) "பரவை பசிவருத்தம் அது நீயும் அறிதியன்றே" (தி. 7 ப. 20 பா. 6, 3) "நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்தேத்திய பத்தும்" (தி. 7 ப. 20 பா 10) கோட்புலியார் புதல்வியரைத் தம் மகளாகக் கருதியது : திருநாட்டியத்தான் குடியில் கோட்புலியார் மகளிரைத் தம் புதல்வியராகக் கொண்டருளினார் சுந்தரர்.
|