பக்கம் எண் :

404
 
"கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற

கொடிறன் கோட்புலி சென்னி

நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி

நம்பியை நாளும் மறவார்

சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்

திருவா ரூரன்.."

(தி. 7 ப. 15 பா. 10)

"வனப்பகை யப்பன்"

(தி. 7 ப. 87 பா. 10)

"வனப்பகையப்பன்.......சிங்கடிதந்தை"

(தி. 7 ப. 57 பா. 12)

பொன் பெற்றது :

திருப்புகலூரில் சுந்தரர்க்கு இறைவன் செங்கல்லைப் பொன்னாக்கி யளித்தனன். இக் குறிப்பு நம்பியாண்டார் நம்பிகளால் விளக்கப்பெற்றுள்ளது.

"புகலூர் பாடுமின் இம்மையே தரும் சோறும் கூறையும்"

(தி. 7 ப. 34 பா. 1)

"தென்புகலூர் அரன்பால் தூயசெம்பொன் கொள்ளவல்லவன்"

-தி. 11 திருத்தொண்டர் திருவந்தாதி, பா. 57

பனையூரில் ஆடல் கண்டருளியது :

திருப்புகலூரிலிருந்து திருவாரூர் செல்லும் சுந்தரர்க்குப் பெருமான் திருப்பனையூர் எல்லையில் ஆடல் காட்டியருளினான்.

"பனையூர்த் தோடுபெய்தொரு காதினிற் குழைதூங்கத்
தொண்டர்கள் துள்ளிப்பாட நின்று ஆடுமாறு வல்லார்"

(தி. 7 ப. 87 பா. 1)

மழபாடியை வழிபட்டது :

திருவாலம்பொழிலில் சுந்தரர் தங்கியிருந்த காலத்தில் இறைவன் கனவில் தோன்றி 'மழபாடிக்கு வருதற்கு மறந்தாயோ'