பக்கம் எண் :

405
 

என்றருளினான். இக்குறிப்பமைந்த திருப்பாடல் பகுதி :-

"மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே"

(தி. 7 ப. 24 பா. 1)

பொற்குவை பெற்றது :

திருப்பாச்சிலாச் சிராமத்தில் இறைவனை இகழ்ந்துரைத்தது போலப் பதிகம் பாடியருளினார் சுந்தரர். திருக்கடைக்காப்பில் இகழ்ந்துரைத்ததையும் பொறுத்து அருள்புரிதல் கடமையென்று வற்புறுத்திப் போற்றிப் பொற்குவை பெற்றார். திருநாவலூர்ப் பதிகத்தில் இகழ்வுரையையும் ஏற்று இறைவன் பொன்னளித்தான் என்று கூறுகின்றார்.

"புன்மைகள்பேசவும் பொன்னைத் தந்தென்னைப்போகம்புணர்த்த
நன்மையினார்க்கு இடமாவது நந்திருநாவலூரே"

(தி. 7 ப. 17 பா. 2)

வழித்துணை பெற்றது :

திருமுதுகுன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுந்தரரைக் கூடலையாற்றூர் இறைவர் வழிப்போக்கராய் வந்து கூடலையாற்றூர்க்கு அழைத்துச்சென்று மறைந்தருளினார். இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் பகுதி.

"கொடியணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே"

(தி. 7 ப. 85 பா. 1)

ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடியது :

திருமுதுகுன்றத்து இறைவர்பால் பெற்ற பன்னீராயிரம் பொன்னைச் சுந்தரர் மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூரில் பரவையார் முன்னிலையில் திருக்குளத்தில் எடுத்தார். அருளால் வாசிதீரப் பெற்றார். இந்நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பகுதி,