"முதுகுன்றமர்ந்தீர், மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள்" (தி. 7 ப. 25 பா. 1) உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச் செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர் வம்பமருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள் எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளங் கெடவே. (தி. 7 ப. 25 பா. 2) "பூத்தாருங் குழலாள் பரவையிவள் தன்முகப்பே கூத்தாதந் தருளாய்" (தி. 7 ப. 25 பா. 9) நம்பியாண்டார் நம்பிகளும் இதனைக் குறித்துள்ளார். | செழுநா வயல்முது குன்றினிற் | செந்தமிழ் பாடிவெய்ய | மழுநீள் தடக்கையன் ஈந்தபொன் | ஆங்குக்கொள் ளாதுவந்தப் | பொழில்நீள் தருதிரு வாரூரில் | வாசியும் பொன்னுங்கொண்டோன் | கெழுநீள் புகழ்த்திரு வாரூரன் | என்றுநாம் கேட்டதுவே. | (தி. 11 தி. திருவந்தாதி. 77) |
பொதிசோறு பெற்றது : திருக்குருகாவூர் இறைவன் சுந்தரருக்குப் பொதிசோறு அளித்த அற்புதத்தைச் சுந்தரர் குறிப்பிடும் பகுதி. "ஆவியைப் போகாமே தவிர்த்துஎன்னை ஆட்கொண்டாய்" (தி. 7 ப. 29 பா. 2) "பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்" (தி. 7 ப. 2 பா. 93)
|