பக்கம் எண் :

407
 

சங்கிலியாரை மணந்தது :

திருவொற்றியூர் இறைவனைப் பணிந்து வேண்டிச் சங்கிலியாரை மணந்த செய்தியைக் குறிப்பிடும் பகுதிகள்.

"பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீழ் இருஎன்று
சொன்ன வெனைக்காணாமே சூளுறவு மகிழ்க்கீழே
என்ன வல்ல பெருமானே"

(தி. 7 ப. 89 பா. 9)

"மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றவருள் செய்தளித்தாய்"

(தி. 7 ப. 89 பா. 10)

"நொய் யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப் புணர்த்த தத்துவனை"

(தி. 7 ப. 51 பா. 11)

"பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கு மெனக்கும்
பற்றாய பெருமானே"

(தி. 7 ப. 46 பா. 11)

ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்
சாந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூரையன் அருளதே.

(தி. 7 ப. 45 பா. 4)

துணையும் அளவுமில்லாதவன் றன்னருளே துணையா
கணையுங் கதிர்நெடு வேலுங்கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்தகட் சங்கிலி பேரமைத் தோளிரண்டும்
அணையுமவன் திருவாரூரனாகின்ற அற்புதனே.

- திருத்தொண்டர் திருவந்தாதி, 40

கண்களை இழந்து வருந்துதல் :

சுந்தரர் சங்கிலியாருக்குச் செய்த சபதம் பிழைத்த காரணத்தால் கண்களை இழந்து வருந்தினார். அதைக் குறிக்கும் பகுதிகள்.


வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
மற்று நானறியேன் மறுமாற்றம்