பக்கம் எண் :

408
 

"ஒழுக்க என்கணுக்கொரு மருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறைவானே"

(தி. 7 ப. 54 பா. 1)

"மூன்று கண்ணுடையாய் அடியேன்கண்
கொள்வதே கணக்கு வழக்காகில்"

(தி. 7 ப. 54 பா. 4)

"கழித்த லைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்துநீ அருளாயின செய்யாய்"

(தி. 7 ப. 54 பா. 5)

"அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
அழையேல் போகுருடா எனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்"

(தி. 7 ப. 54 பா. 9)

"தண்பொழி லொற்றி மாநகருடையாய்
சங்கிலிக்கா வென்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே"

(தி. 7 ப. 69 பா. 3)

"கண்மணியை மறைப்பித்தாய்"

(தி. 7 ப. 89 பா. 6)

ஊன்றுகோல் பெற்றது :

சுந்தரர் திருவெண்பாக்கத்து இறைவரை வழிபட்டு ஊன்றுகோல் பெற்றதைக் குறிப்பிடும் பகுதிகள் :

"ஊன்று கோலெனக் காவ தொன்றருளாய்"

(தி. 7 ப. 54 பா. 4)

மான்திகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாம்
தோன்றஅருள் செய்தளித்தா யென்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன
ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீ ரென்றானே.

(தி. 7 ப. 89 பா. 10)