பக்கம் எண் :

588
 
194

தலையிடை யார்பலி சென்றகந் தோறுந்

திரிந்தசெல்வர்

மலையுடை யாள்ஒரு பாகம்வைத்

தார்கற் றுதைந்தநன்னீர்

அலையுடை யார்சடை எட்டுஞ்

சுழல அருநடஞ்செய்

நிலையுடை யார்உறை யும்மிட

மாந்திரு நின்றியூரே.

7

195எட்டுகந் தார்திசை யேழுகந்

தார்எழுத் தாறுமன்பர்

இட்டுகந் தார்மலர்ப் பூசைஇச் சிக்கும்

இறைவர்முன்னாள்

பட்டுகும் பாரிடைக் காலனைக்

காய்ந்து பலியிரந்தூண்

சிட்டுகந் தார்க்கிட மாவது

நந்திரு நின்றியூரே.

8



7. பொ-ரை: தலை ஓட்டிற் பொருந்துகின்ற பிச்சைக்குச் சென்று இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மையை உடையசெல்வரும், மலையைப் பிறந்த இடமாக உடையவளை ஒருபாகத்தில் வைத்தவரும், மலையின்கண் நிறைந்து வீழ்கின்ற நல்ல நீரினது அலையை உடைய நிறைந்த சடைகள் எட்டும் எட்டுத் திசைகளிலும் சுழலுமாறு அரிய நடனத்தைச் செய்கின்ற நிலையினை உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரேயாம்.

கு-ரை: "பலி" என்புழி, நான்கனுருபு விரிக்க, "கல் துதைந்த" என்றது, ஆற்றின் இயல்பை விரித்தவாறு.

8. பொ-ரை: திசைகள் எட்டினையும், ஏழ் எழுத்துக்களால் தோற்றுவிக்கப்படும் இசைகள் ஏழினையும், மனம் அடங்கப்பெற்ற அன்பர்கள் விரும்பியிடுதலால் நிறைந்த மலர்களையுடைய வழி பாட்டினையும் முன்னொருநாள் நிலத்தின்கண் இறந்து வீழ்ந்த கூற்றுவனை அவன் அங்ஙனம் ஆமாறு வெகுண்டமையோடு, பிச்சையேற்று உண்ணுதலை உடைய ஒழுக்கத்தினையும் விரும்புகின்றவராகிய இறைவருக்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.