| தஞ்சங்கொண்டார்தமக் கென்றும் | | இருக்கை சரணடைந்தார் | | நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது | | நந்திரு நின்றியூரே. | | 5 |
193. | ஆர்த்தவர் ஆடர வம்மரை | | மேற்புலி ஈருரிவை | | போர்த்தவர் ஆனையின் தோலுடல் | | வெம்புலால் கையகலப் | | பார்த்தவர் இன்னுயிர் பார்படைத் தான்சிரம் | | அஞ்சிலொன்றைச் | | சேர்த்தவ ருக்குறை யும்மிட | | மாந்திரு நின்றியூரே. | | 6 |
பெருவிருப்புடையவரும், திருவதிகைப் பதியினையே தமக்கு என்றும் இருக்கையாகும்படி அதனைத் தஞ்சமாகக் கொண்டவரும், தம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே. கு-ரை: "பால்" என்றதன் ஈற்றில், ‘முதலிய’ என்பது தொகுத்தலாயிற்று. 6. பொ-ரை: அரையில் புலியினது பசுந்தோலையும், ஆடுகின்ற பாம்பையும் கட்டியவரும், உடம்பில் யானையின் தோலைப் போர்த்தவரும், அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு செய்து கொண்டவரும், பூமியில் இனிய உயிர்களைப் படைத்தவனாகிய பிரம தேவனது தலைகள் ஐந்தில் ஒன்றைத் தம் கையில் வைத்துக்கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடம் திருநின்றியூரேயாகும். கு-ரை: ‘சேத்தவர்’ எனப் பாடம் ஓதி, ‘சேதித்தவர்’ என்பது குறைந்து நின்றதாக உரைப்பாரும் உளர்.
|