191. | ஆறுகந் தார்அங்கம் நான்மறை | | யார்எங்கு மாகிஅடல் | | ஏறுகந் தார்இசை ஏழுகந் தார்முடிக் | | கங்கைதன்னை | | வேறுகந் தார்விரி நூலுகந் | | தார்பரி சாந்தமதா | | நீறுகந் தார்உறை யும்மிட | | மாந்திரு நின்றியூரே. | | 4 |
192. | வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில் | | லார்நறு நெய்தயிர்பால் | | அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி | | னார்அதி கைப்பதியே |
கு-ரை: "பாகர்" என்னும் வினைக்குறிப்பு முற்று எச்சமாயிற்று. "மகிழ்ந்த" என்றது, தன் காரியத்தையும் தோற்றுவித்து நின்றது. 4. பொ-ரை: வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்தவரும், நான்கு வேதங்களையும் உடையவரும், எவ்விடத்தும் நிறைந்து நின்று, வெல்லுதலை உடைய எருதை விரும்பி ஏறுபவரும், ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும், கங்காதேவியைச் சிறப்பாக விரும்பித் தலையில் மறைத்து வைத்திருப்பவரும், அகன்ற முப்புரி நூலை விரும்பி அணிபவரும், பூசிக்கொள்கின்ற சாந்தமாக திருநீற்றை விரும்புகின்ற வரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரே. கு-ரை: "உகத்தல்" பலவும், அவற்றின் காரியத்தைத் தோற்றுவித்தன. உமையம்மையை இடப்பாகத்தில் வைத்தமை பொதுவாக உயிர்கட்கு அருள்புரிதலையும், கங்கையை முடியில் தாங்கியது, சிறப்பாகப் பகீரதனுக்கு அருள்புரிந்தமையும் உணர்த்தலின், "முடிக் கங்கை தன்னை வேறுகந்தார்" என்று அருளினார். "கங்கையிடத்துக் காதலை மிக உடையார்" என்பது நயம். 5. பொ-ரை: வஞ்சனையை உடையவரது மனத்திற் சேராதவரும், ‘நறுநெய், தயிர், பால்’ முதலிய ஆனஞ்சினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற
|