429. | துளைவெண்குழை யுஞ்சுருள் வெண்டோடுந் | | தூங்குங்கா திற்றுளங் கும்படியாய் | | களையேகம ழும்மலர்க் கொன்றையினாய் | | கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே | | பிளைவெண்பிறை யாய்பிறங் குஞ்சடையாய் | | பிறவாதவ னேபெறு தற்கரியாய் | | வெளைமால்விடை யாய்வெஞ்ச மாக்கூடல் | | விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே. | | 5. |
உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, இன்பத்தைத் தரும் அரிய அகிலையும், நல்ல கவரியையும் அலைத்துக்கொண்டு வந்து கரையை மோதுகின்ற சிற்றாற்றின் 'கீழ்க்கரைமேல் உள்ள, மண்பொருந்திய மத்தளமும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின்மேல், வானத்தில் பொருந்திய ச்திரன் தவழ்கின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள். கு-ரை: தண்மை, மனங் குளிர்தலைக் குறித்தது. மண் மத்தளத்திற் பூசப்படுவது; இதனை, 'மார்ச்சனை' என்ப. 5. பொ-ரை: துளைக்கப்பட்ட வெள்ளிய குழையும், சுருண்ட வெள்ளிய தோடும் நீண்ட காதினிடத்தில் அசைகின்ற வடிவத்தை யுடையவனே, தேனினது மணத்தை வீசுகின்ற கொன்றை மலரைச் சூடியவனே, அடைந்தவர்க்கு அருள்செய்கின்ற கற்பகம் போல் பவனே, இளைய வெள்ளிய பிறையைச் சூடியவனே, விளங்குகின்ற சடைமுடியை உடையவனே, பிறத்தலைச் செய்யாதவனே, கிடைத்தற்கு அரியவனே வெண்மையான பெரிய விடையை உடையவனே, திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற, வேறுபட்ட இயல்பை உடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள். கு-ரை: தோளில் தோய நீண்டிருத்தலின், ''தூங்கும் காது'' என்றார். 'தோடும் சங்கினால் ஆயது' என்க. 'கள்ளை, பிள்ளை, வெள்ளை என்பன, இடைக்குறைந்து நின்றன. ''கள்'' ஆகுபெயர்.
|