பக்கம் எண் :

874
 
554.வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்

உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்

சுழித்த லைப்பட்ட நீரது போலச்

சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளம்

கழித்த லைப்பட்ட நாயது போல

ஒருவன் போல்பற்றிக் கறகற விழுக்கை

ஒழித்து நீஅரு ளாயின செய்யாய்

ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

5


கொண்டது - பெற்றது. தோன்றுதலுக்கு வினைமுதலும், அளித்தலுக்குச் செயப்படு பொருளும் வருவிக்கப்பட்டன. "சொல்லுவார்" என்றது, அளிக்கப் பட்டவரையேயாம். "அல்லாதன சொல்லாய்" என்றது, 'வெகுள் வாயல்லை' எனப் பொருள் தந்து, "சொல்லுவாரை" என்றதற்கு முடிபாயிற்று. 'இம்முறைமை யெல்லாம் என்னிடத்தேயும் காட்டிய நீ, இதுபோது என்னை வெகுண்டு என் கண்களைப் பறித்துக் கொண்டாய்' என்றபடி, ஊன்றுகோலை இறைவனே தரவேண்டியது, இவ்வளவிலேனும் அவனது இரக்கத்தைப் பெறின், வருத்தம் நீங்கும் என்பது பற்றியும், அவ்வூன்று கோலே கண்ணாக இயங்குதலை அவன் நெடிது கண்டிரான் என்பது பற்றியுமாம்.

5. பொ-ரை: 'ஒற்றியூர்' என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, யான் நன்னெறியைத் தலைப் படவே முயல்கின்றேன்; ஒருஞான்றும் என்னை உன்னைப்போல ஒன்றாலும் தாக்குண்ணாத பெருமையேனாக நினைக்கின்றிலேன்; அங்ஙனமாகவும், நீ என் கண்ணைப் பறித்துக் கொண்டதனால், வழிதெரியாது, சுழியிடத்துப்பட்ட நீர் போலச் சுழலாநின்றேன். என் உள்ளமும் ஒன்றும் அறியாது சுழல்கின்றது; இவற்றையும், கழியிற் பொருந்திய நாயைப் போல ஒருவன் தரும் கோலை விடாதுபற்றி நின்று, அவனால், 'கறகற' என்று இழுக்கப்படுதலையும் ஒழித்து, நீ உனது திருவருள்களை எனக்கு அளித்தருள்.

கு-ரை: "வழித்தலைப்படுவான் முயல்கின்றேன்; உன்னைப் போல் என்னைப் பாவிக்கமாட்டேன்" என்றது, 'யான் என் செருக்கினால் இக் குற்றம் செய்தேனல்லேன்' என்றவாறு. உன்னைப் போல் என்னைப்பாவித்தல் என்றது, சிவோகம் பாவனையை' என்றுங் கூறுப. கழித்தலைப்பட்ட நாய், கழியிற் கட்டிவைக்கப்பட்ட நாய்;