பக்கம் எண் :

875
 
555.மானை நோக்கியர் கண்வலைப் பட்டு

வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்

தேனை ஆடிய கொன்றையி னாய்உன்

சீல முங்குண முஞ்சிந்தி யாதே

நானு மித்தனை வேண்டுவ தடியேன்

உயிரொ டுந்நர கத்தழுந் தாமை

ஊள முள்ளன தீர்த்தருள் செய்யாய்

ஒற்றி யூரெனும் ஊருறை வானே.

6


அஃது ஒருவன் கோலைப்பற்றி நிற்றற்கு உவமை.

'கறகற' என்பது, விரைவுக் குறிப்பு. "கறகற" என்றதன்பின், 'என்று' என்பது தொகுத்தலாயிற்று. "இழுக்கை" என்றதை, 'இழுக்கப்படுகை' என்க. "ஒழித்து" என்றது, எல்லாவற்றையும் குறித்து, ஒழிக்கப்படுவன பலவாயினமைபற்றி, அருளும் பலவாயிற்று என்க.

6. பொ-ரை: தேன் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனே, "ஒற்றியூர்" என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே, யான் மான்போலும் பார்வையினை யுடைய மாதரது கண்ணோக்காகிய வலையில் அகப்பட்டு, உனது செயல்முறையையும், குணத்தையும் நினையாமலே செய்துவிட்ட பெரிய குற்றத்திற்கு அஞ்சியே, நானும் பிறர் போல உன்னை இத் துணை இரந்துவேண்டுவதாயிற்று; அதனால், என்றும் உன் அடியேனாகிய யான் உயிரோடே நரகத்தில் மூழ்காதபடி, எனக்கு உண்டாகிய குறையினை நீக்கி அருள் செய்யாய்.

கு-ரை: "மானை, தேனை" என்ற ஐகாரங்கள் சாரியை. இறைவன் சீலமாவது, யார்மாட்டுங் கண்ணோடாது முறைசெய்தல், குணமாவது, அங்ஙனம் செய்தற்கேற்ற, பற்று இகல் இல்லாத நடுவு நிலைமை. சுவாமிகள், தம்மிடத்து இறைவன் அவ்வாறு இரான் என்று நெகிழ நினைந்தாராகலின். "சிந்தியாதே உற்ற வல்வினை" என்று அருளினார்.

உறுதல் - பொருந்துதல்; அஃது ஈண்டு, செய்தலின் மேல தாயிற்று. "வல்வினை" என்றது, அதற்கு ஏதுவாகிய பெருங் குற்றமான செயலை. அஃதாவது சங்கிலியார் பொருட்டுச் செய்த சூளினைப் பொருட்படுத்தாது கைவிட்டமை, சுவாமிகள் இறைவர்பால் தமக்கு