678. | பல்லடி யார்பணிக் குப்பரி வானைப் | | பாடிஆ டும்பத்தர்க் கன்புடை யானைச் | | செல்லடி யேநெருங் கித்திறம் பாது | | சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை | | நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை | | நான்உறு குறைஅறிந் தருள்புரி வானை | | வல்லடி யார்மனத் திச்சையு ளானை | | வலிவ லந்தனில் வந்துகண் டேனே. | | 2 |
குறித்தது. 'உலகு' என்றது உயிர்களையேயாதலின், 'அவ்வுலகிற் கெல்லாம்' எனச் சுட்டு வருவித்து, உருபு விரித்துரைக்க. ஓங்காரமாவது, பொருளுணர்வை எழுப்பும் வாக்காதலின், "ஓங்காரத்துருவாகி நின்றானை" என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக. "வானம்" ஆகுபெயர். கைத்தல் இரண்டனுள், முன்னது வெறுப்பினையும், பின்னது கைப்புச் சுவையினையும் குறித்தன. விண்ணுலகத்தை வெறுத்தவர், வீடுபேறு வேண்டுவோர்; என்றது. பிற சமயிகளை. அவர்தாம் சிவபிரானை உணரமாட்டாராகலின், 'அவரால் அளத்தற்கரியவன்' என்று அருளினார். 'உள்ளத்துள்' என இயைக்க. 'தேன்' என்பது, எதுகை நோக்கி, ஈற்றில் அம்முப் பெற்றது; அதனானே, 'தேனும்' என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. "கைத்து" என்றதனை, 'கைப்ப' எனத்திரிக்க. "அமுதாகி" என்றதில் உள்ள ஆக்கம், உவமை குறித்து நின்றது. அமுதம், இனிமை பற்றி வந்த உவமை. "வந்து" என்ற விதப்பினால், அஃது இவ்வாறு, 'ஈந்து புகழ் பெற்றான்' என்றல் போல, காரணப் பொருட்டாய் நிற்றல் பெறப்பட்டது; அதனானே, 'வாராவிடில் எங்ஙனங் காண்பேன்' என்ற மறுதலைப் பொருளும் தோன்றுவதாயிற்று. 'வானங்கத்தவர்' என்பதும் பாடம். ஊனங்கைத்தவர், தேனங்கத்து' என்பன பாடம் அல்ல. 2. பொ-ரை: பலதிறப்பட்ட அடியவரது தொண்டுகட்கும் இரங்குபவனும், இசையோடு பாடி, அதனோடு ஆடலையும் செய்கின்ற சீரடியார்களைத் தன் தமர்களாகக் கொண்டு தொடர்புடையவனாகின்றவனும், தன்னை நோக்கிச் செல்லுகின்ற வழியிலே மாறுபடாது சென்று அணுகித் தன்னைப் பெற்றவர்கட்கே சித்தியையும் முத்தியையும் தருபவனும், நல்ல அடியார்களது மனத்தில், எய்ப்பிற்கு என்று வைத்துள்ள நிதியின் நினைவு போல நின்று அமைதியைத் தருபவனும், நான் அடைந்தனவும் அடையற்பாலனவுமாகிய குறைகளைத் தானே அறிந்து, அவற்றைக் களைந்தும், வாராது தடுத்தும் அருள்புரிபவனும்,
|