பக்கம் எண் :

993
 
679.ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை

ஆதிஅந் தம்பணி வார்க்கணி யானைக்

கூழைய ராகிப்பொய் யேகுடி யோம்பிக்

குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும்

வாழியர்க் கேவழு வாநெறி காட்டி

மறுபிறப் பென்னை மாசறுத் தானை

மாழையொண் கண்உமை யைமகிழ்ந் தானை

வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

3



கற்றுவல்ல அடியார்களது உள்ளத்தில் தங்குவதற்கு விருப்பம் உடையவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!

கு-ரை: இதன்கண் அடியராவார் பல திறத்தினரையும் அருளிச் செய்தவாறு அறிக. பல்லடியார், விதி மார்க்கம் பத்தி மார்க்கம் என இருதிறத்திலும் பல்வேறு வகைப்பட நிற்பவர். பாடிஆடுவார், இசை கூத்துக்களால் வழிபடுவார்; இவ் வழிபாடு சிறந்ததாகலின், வேறு வைத்து அருளினார். திறம்பாது சென்று சேர்ந்தவர், வாசனா மலத்தின் தாக்குதலுக்குத் தோலாது, இறைவன் திருவடியைப்பற்றி நின்றவர். 'நெருக்கி' என்பது பாடம் அன்று. "சித்தி" என்றது, அவர்கள் வாயிலாகத் தான் நிகழ்த்தும் அற்புதங்களை. அவை, ஞானசம்பந்தர், நாவுக்கரசர் முதலிய ஆசிரியன்மாரிடத்து நிகழ்ந்தவை போல்வன. நல்லடியார், திருவும் மெய்ப்பொருளும் எல்லாம் இறைவனே என்று இருப்பவர். அவர், சுந்தரர் போல்வார். வல்லடியார், ஞானநூல்தனை ஓதல் ஓதுவித்தல் முதலிய ஞான பூசையைச் செய்பவர். வைப்பு, ஆகுபெயர்.

3. பொ-ரை: ஆழ்ந்தவனாகியும், அகன்றவனாகியும், உயர்ந்தவனாகியும் உள்ளவனும், பிறந்தது முதற் சாங்காறும் வழிபடுவார்க்கு அணியனாகின்றவனும், பணிவுடையவராய், குடியை, உள்ளத்தில் பற்றின்றிப் புரந்து, மனம் உருகிநின்று, தம்மை மெய்யடியார் கூட்டத்துள் வைத்தெண்ணும் வாழ்க்கையையுடையவர்க்கு அடிமை செய்தலில் தவறாத நெறியை உணர்த்து மாற்றால், என்னை மறுபிறப் பெடுத்தலாகிய குற்றத்தை அறுத்துத் தூயனாக்கியவனும், மாவடுப் போலும் கண்களையுடைய உமாதேவியை விரும்பி ஒருபாகத்தில் வைத்தவனும் ஆகிய பெருமானை, அடியேன், திருவலிவலம்'