பக்கம் எண் :

994
 
680.நாத்தான் தன்திற மேதிறம் பாது

நண்ணிஅண் ணித்தமு தம்பொதிந் தூறும்

ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும்

அளவிறந் தபஃறேவர்கள் போற்றும்



என்னும் இத்தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!

கு-ரை: ஆழ்தல், அகலுதல், உயர்தல்களுக்கு எல்லை, மாயையும், உயிர்களுமாம். அவற்றிற்கு அப்பாற்பட்டவன் என்பது திருக் குறிப்பு. சிவவழிபாட்டினை இடைக்கண் விட்டொழிவார்க்கு சிவன், திரிபுரத்தவர்க்கு நின்றாற்போல நிற்பனாகலின், "ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை" என்று அருளினார். இதனானே, சிவவழிபாட்டினை வழங்குவோர், 'நீவிர் சாங்காறும் இவ்வழிபாட்டினை விடாது செய்தல் வேண்டும்' என்று விதிப்பதும், பெறுவோர், 'யான் சாங்காறும் இதனை விடாது செய்வேன்; நாள் தோறும் இவ்வழி பாட்டினைச் செய்தன்றி உண்ணேன்' என்று உறுதிகூறி ஏற்றலும் முறையாயின வென்க. அங்ஙனம் தாம் உடம்பட்டவாறே வழுவாது வழிபடுவார்க்குச் சிவன், அணியனாய் நின்று அருளுதலையும், அவரவர்பால் அணுகிநின்று அறியலுறின் அறியப்படுவதே என்பதும் உணர்க. 'பணியார்க்கு' என்பதும் ஈண்டைக்கியைய உரைக்கற்பாற்றாயினும், அஃது ஈண்டு ஒவ்வாதென விடுக்க. கூழை. கடை குறைதலாதலின் அது, குறைந்து பின்னிற்றலைக் குறித்தது. குடி - குடும்பம். புறத்துக் காண்பவர், குடும்பத்தில் பற்றொடு நிற்கின்றார் எனக் கருத, சிவனடியார் உள்ளத்துப் பற்றின்றியே அதனொடு நிற்றலின், அந்நிலையை, "பொய்யே குடியோம்பி" என்று அருளினார். குழைதல், சிவபிரானிடத்தும், அவன் அடியாரிடத்தும். "வாழி" என்றதில், இகரம் தொழிற்பெயர் விகுதி. "வாழியர்க்கு" என்பதனை, 'வாழிய ரிடத்து' எனத் திரிக்க. அவரிடத்து வழுவுதல் - அவர்க்கு அடிமை செய்தலில் தவறுதல். சுந்தரர் அடியார்க்கு அடியராய், அவர்தம் அடிமைத் திறத்தில் திறம்பாது நின்றமை அறிக. இனி, "காட்டி" என்னும் எச்சத்தினை, எண்ணின்கண் வந்ததாகக்கொண்டு, 'வாழியர்க்கே வழுவா நெறி காட்டுபவனை' என்று உரைத்தலுமாம். "மாசு" என்றது வினையை. மாசினால் வருவதனை, "மாசு" என்றார். பான்மை வழக்கினால். "என்னை மாசறுத்தான்" என, வினையது நீக்கம், வினைமுதல்மேல் ஏற்றப்பட்டது.

4. பொ-ரை: அடியேற்கு, எனது நா, தனது புகழைச் சொல்லுதலில் என்றும் மாறுபடாதவாறு என்னிடத்துப் பொருந்தி, உள்ளே அமுதம்