பக்கம் எண் :

995
 
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித்

துருவி மால்பிர மன்னறி யாத

மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை

வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

4


681.

நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்

கரையனும் பாடிய நற்றமிழ் மாலை

சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்

தொண்ட னேன்அறி யாமை யறிந்து

கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்

கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்

வல்லியல் வானவர் வணங்கநின் றானைவலிவ 

லந்தனில் வந்துகண் டேனே.

5



நிறைந்தாற்போல இனித்து ஊற்றெழுகின்ற துணைவனாய் உள்ளவனும், எண்ணில்லாத பல தேவர்களும் துதித்து வணங்குகின்ற வணக்கத்திற்கு உரியவனும். 'ஞாயிறு, திங்கள், தீ' என்னும் முச்சுடர்களிலும் வேறற நிற்பவனும், திருமாலும் பிரமனும் தேடி அறியப்படாத பெருமையை உடையவனும், எனக்குப் பெருமையை அளித்தவனும் ஆகிய பெருமானை, அடியேன், 'திருவலிவலம்' என்னும் இத் தலத்தில் வந்து அடைந்ததனாற் கண்டேன்; இல்லாவிடில் எங்ஙனங் காண்பேன்!

கு-ரை : 'உன் திறமே' என்பது பாடம் அன்று, 'திறம்பாமை' என்பது, 'திறம்பாது' எனத் திரிந்துநின்றது. "பொதிந்து" என்றது, பொதிந்தாலொப்ப நிற்றலை உணர்த்திற்று. 'ஆத்தன்' என்பது நீட்டலாயிற்று. 'அடியேன்றனக்கு ஆத்தன்' என இயைக்க. 'சோத்தம்' என்பது, கடைக் குறைந்து நின்றது, 'மகத்' என்னும் ஆரியச்சொல், 'மாத்து' எனத் திரிந்து நின்றது. இறைவன் சுந்தரர்க்கு அளித்த பெருமை, தோழமை.

5. பொ-ரை : சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த, தமிழ்ச் சொல்லால் அமைந்த மெய்யுணர்வு மாலையாகிய, முன்பு அவர்களால் சொல்லப்பட்டனவற்றையே பின்னும் பிறர் சொல்லிப் போற்றுதலை விரும்புபவனும், அடியேனது அறியாமையை அறிந்து, கல்லின் இயல்பைக் கொண்ட எனது மனத்தை உருகப்பண்ணி, கழல்