பக்கம் எண் :

2திருவிசைப்பா[ஒன்பதாந்


இத்திருப்பதிகம்,      ‘உயிர்கட்கு      இறைவனது     காட்டும்
உபகாரமேயன்றிக்  காணும்  உபகாரமும் இன்றியமையாதது’  என்பதை
விளக்குவது.  சிவஞான  போதப்  பதினொன்றாம்  சூத்திர  உரையுள்
இப்பொருட்கு இத்திருப்பதிகமே எடுத்துக்காட்டப்பட்டிருத்தல் காண்க.

1.  இதனுள்,   ‘விளக்கு’    முதலியனவாகக்       கூறப்பட்டவை
உவமையாகுபெயர்கள். ‘‘ஒளிவளர்  விளக்கு’’  என்றதில்,   வளர்தல்,
முடிவின்றி  விளங்குதல்.  எனவே,  ‘நெய், திரி, அகல்  என்பவற்றைக்
கொண்டு ஏற்றப்பட்ட செயற்கை விளக்காகாது  இயற்கையில் விளங்கும்
விளக்கு’ என்றதாயிற்று. இதனையே, ‘நந்தா விளக்கு’ எனவும், தூண்டா
விளக்கு’   எனவும்   கூறுவர்.   மாணிக்கமும்,   வயிரமும்  போன்ற
மணிவிளக்குக்கள்  இங்ஙனம் அமைவனவாம். எனினும்,   ‘அவற்றினும்
மேம்பட்ட விளக்கு’ என்பதையே, ‘உலப்பிலா ஒன்றே’’  என்பதனாலும்,
அவ்வாறாதல் அறிவே உருவாய் நிற்றலாலாம்’ என்பதை, ‘‘உணர்வுசூழ்
கடந்ததோர் உணர்வே’’ என்பதனாலும் குறித்தருளினார்.

‘‘உணர்வு’’     இரண்டனுள்  முன்னையது   உயிரினது    அறிவு.
சூழ்-எல்லை.    இறைவன்    உயிர்கள்     அனைத்தையும்   தனது
வியாபகத்துள்  அடக்கி  நிற்பவன்  ஆதலின்.  அவனை,   ‘அவற்றது
அறிவின்   எல்லையைக்  கடந்தவன்’  என்றார்.   ‘கடவுள்’  என்னும்
சொற்கும்  இதுவே  பொருளாதல் அறிக. தெளி வளர்- தூய்மை மிக்க.
‘பளிங்கின்  திரளாகிய அழகிய  குன்றே’ என உரைக்க. மணி- அழகு.
சிவபெருமான்     பளிங்குமலைபோல     விளங்குதல்,    திருநீற்று
ஒளியினாலாம்.     அளி-அன்பு.     ஆனந்தக்   கனி- இன்பமாகிய
சாற்றையுடைய  பழம்.  ‘இன்பம்’  என்பது, தலைமை  பற்றி, வரம்பில்
இன்பமாகிய   பேரின்பத்தையே   குறித்தது.   முன்னர்,  ‘சித்தத்துள்
தித்திக்கும்     தேன்’’     என்றது.     துரியநிலைக்கண்   நிகழும்
அனுபவத்தையும்,  பின்னர்,  ‘‘அளிவளர் உள்ளத்து  ஆனந்தக் கனி’’
என்றது,  அதீதநிலைக்கண்  நிகழும் அனுபவத்தையும்  குறித்தனவாம்.
வெளிவளர்  கூத்து-காட்சிப்  புலனாய்,  முடிவின்றி   நிகழும் நடனம்.
‘வெளியாகி’  என ஆக்கம் வருவிக்க. தெய்வக் கூத்து-அருள்  நடனம்.
அஃதாவது,  உயிர்கட்கு ‘பெத்தம்’, ‘முத்தி’ என்னும்  இருநிலைகளிலும்
ஏற்றபெற்றியால்  அருள்புரியும் நடனம். அவ்விருவகை   நடனங்களின்
இயல்பையும்