பக்கம் எண் :

திருமுறை]1. கோயில்5


3.

தற்பரம் பொருளே ! சசிகண்ட சிகண்டா !
   சாமகண் டா ! அண்ட வாணா !
நற்பெரும் பொருளாய் ! உரைகலந் துன்னை
   என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத் தளவிலா உன்னைத்
   தந்தபொன் னம்பலத் தரசே !
கற்பமாய், உலகாய், அல்லைஆ னாயைத்
   தொண்டனேன் கருதுமா கருதே.                (3)

 

4.

பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
   பிறப்பிறப் பறுத்தபே ரொளியே !
கருமையின் வெளியே ! கயற்கணாள் இமவான்
   மகள்உமை யவள்களை கண்ணே !
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
   அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
   தொண்டனேன் உரைக்குமா றுரையே.            (4)
 

3.    தத்  பரம்பொருள்- வேதத்துள்,  ‘தத்’  என்னும் சொல்லால்
குறிக்கப்படும்  பரம்பொருள்.  ‘தன்  பரம்’   எனப்  பிரித்து,  தனக்கு
மேலான-உணர்கின்ற பொருட்கு  (உயிர்கட்கு) மேலாய  பொருள்’ என
உரைத்தலும்  உண்டு.  சசிகண்டன்- நிலாத்  துண்டத்தை  யணிந்தவன்.
இப்பெயர் விளியேற்றது. சீகண்டன் என்பது முதல்குறுகி,  விளியேற்றது.
சிகண்டம். முடி என்பாரும் உளர். சாமகண்டன்- கருமையான கழுத்தை
உடையவன்;  ‘சாமவேதம்  முழங்கும்  குரலை  உடையவன்’ என்றலும்
உண்டு.   ‘‘அண்டம்’‘  என்றது,   சிதாகாசத்தை, ‘‘நற்பெரும்பொருள்’‘
என்றதில்     பொருள்,    சொற்பொருள்,    உரை  கலந்து -எனது
சொல்லிற்சேர்த்து,     அற்பன் - சிறியன்,     கற்பம் - ஊழிக்காலம்.
உலகு-அக்கால எல்லைக்குள் தோன்றி நின்று ஒடுங்கும் பொருள்கள்.

4.     பெருமையின் -  பெருமையாய்   உள்ள   நிலையிற்றானே.
‘‘கருமையின்   ஒருமையின்’’    என்பவற்றிற்கும்  இவ்வாறு  உரைக்க.
‘‘ஆய்’’     என்றதனை,     ‘‘சிறுமை’’     என்றதற்கும்    கூட்டுக.
வெளி-வெண்மை.  ‘‘களைகண்ணே’’  என்பதில் ணகர ஒற்று விரித்தல்,
களைகண்-பற்றுக்கோடு; ‘கொழுநன்’