திருச்சிற்றம்பலம்
லைப் பொறுத்தல் இயல்பே என்றற்கு அவ்வன்சொற் பொறுத்தலை உவமையாக்கினார். ‘பொறுக்கும் கருணாநிலயமே’ என இயையும். நிலயம்-இருப்பிடம். இறுதித் திருப்பாட்டுக்களில் தம்மைப் பற்றிக் குறிக்கின்ற இவ்வாசிரியர், அவற்றைத் திருக்கடைக்காப்பாக அருளாது, தமது பாடலை இறைவன் ஏற்றருள வேண்டிக் கூறுகின்றார்.
கோயிற் புராணம் பொற்ப தப்பொது வார்புலி யூர்புகழ் சொற்ப தப்பொரு ளாகுவ தூயவ ரற்ப கற்றொழ வாழணி கோபுரக் கற்ப கத்தனி யானை கழல்களே. பாயிரம் பூங்கமலத் தயனுமலர் புண்டரிகக் கண்ணானுந் தாங்குபல புவனமுமேற் சகலமுமா யகலாத வோங்குமொளி வெளியேநின் றுலகுதொழ நடமாடுந் தேங்கமழும் பொழிற்றில்லைத் திருச்சிற்றம் பலம்போற்றி. 1 ஆரணங்கண் முடிந்தபதத் தானந்த வொளியுலகிற் காரணங்கற் பனைகடந்த கருணைதிரு வுருவாகிப் பேரணங்கி னுடனாடும் பெரும்பற்றப் புலியூர்சேர் சீரணங்கு மணிமாடத் திருச்சிற்றம் பலம்போற்றி. 2 தற்பரமாய்ப் பரபதமாய்த் தாவிலநு பூதியதா யற்புதமா யாரமுதா யானந்த நிலயவொளிப் பொற்பினதாய்ப் பிறிவிலதாய்ப் பொருளாகி யருளாகுஞ் சிற்பரமா மம்பரமாந் திருச்சிற்றம் பலம்போற்றி. 3 |