10. மடங்கல்- சிங்கம்; நரசிங்கம். கனகன்-‘இரணிய கசிபு’ என்னும் அசுரன். இவ்வடி, சரப வரலாற்றைக் குறித்தல் கூடும். மருளார்-மருட்சியுடையவரது. திரிபுரத்தசுரர் புத்தன் போதனையால் மயங்கிச் சிவநெறியைக் கைவிட்டவராதல் அறிக. வைதிகத் தேர்-வேதத்தைக் குதிரையாகக் கொண்ட தேர். ஏறு சேவகன்- மிக்க வீரத்தை யுடையவன். அரக்கன்-இராவணன். அரட்டு - செருக்கு. இரு வரை-பெரிய மலை, ‘அருட்டிரு வரைக்கீழ்‘ எனவும் பாடம் ஓதுவர். விடங்கன்-அழகன். 11. ‘‘ஓர்வரியாய்’’ எனப் பின்னர் வருகின்றமையின் வாளா, ‘‘மாட்டாது’’ என்றார். ‘‘முறை முறை’’ என்ற அடுக்கு, பன்மை பற்றி வந்தது. ‘முறையிட்டும்’ என்னும் உயர்வு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ‘ஓர்ப்பரியாயை’ என்பதும் பாடம். ‘‘அரன்’’ என முன்னிலையிற் படர்க்கை வந்தது. ‘‘அரன்சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையிற் பொறுக்கும்’’ என்றது. ‘உனது பெருமையைச் சிறிதும் அறியாது இகழும் அறிவிலிகளது இகழுரையைப் பொறுத்துக்கொள்ளுதல் போலப் பொறுத்துக்கொள்கின்ற’ என்றபடி வெறுமை- அறிவின்மை. சிறுமை - இகழ்ச்சி. இவ்விரண்டும் ஆகுபெயர்களாய் அவற்றை உடைய மக்கள்மேலும், சொற்கள்மேலும் நின்றன. ‘சிறிதும் அறியாது இகழ்ந்துரைக்கின்றவன் சொற்களைப் பொறுப்பவனுக்குச் சிறிது அறிந்து புகழ்கின்ற புன்சொல் |