13, கருவளர்-சூல் மிகுந்த. அகடு-வயிற்றின்கண். ‘மகுடம்’ என்றது, சிகரத்தை. கலந்து-கலக்கப்பட்டு. பெரும்பற்றப் புலியூராகிய ‘தெய்வப்பதி’ எனவும், ‘தெய்வப் பதிச்சிற்றம்பலம்’ எனவும் இயையும். திரு-அழகு. விதி நிதியம்-முறைப்படி செய்யும் வழிபாடாகிய செல்வம். உரு-அழகு, ‘உருவளர் சிலம்பு’ என்க. அன்றி, உருவளர் அடி’ எனலுமாம். ‘நான்மறைத் தொழில்சால்’ எனவும், ‘தெய்வப் பதி வதி’ எனவும், பாடம் ஓதுப. 14. வரம்பு இரி-கரைக்குமேல் பாய்கின்ற. மிளிர்-பிறழ்கின்ற. கரும்பு, பின்னர்க் கூறப்படுகின்ற செந்நெல் வயலில் உள்ளது. மாந்திடும்-உண்கின்ற. மேதி-எருமை. பிரம்பு இரி- பிரப்பம்புதரில் செல்கின்ற, ‘செந்நெற் கழனியையுடைய |