வஞ்சகச் சொல். தொழும்பர் - பிறர்க்கு அடிமையாய் நிற்பவர். பிழம்பு-இனிது விளங்காத சொல்; முணுமுணுத்தல். பிட்டர்- நொய்யர்; சிறியோர். இச்சொல் ‘பிட்டம்’ என்பதினின்று; பிறந்தது. ‘‘பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா பேணித் தொழுமின்கள்’’(திருமுறை- 1-69-10) என்று அருளிச்செய்தமை காண்க. 37. ‘அருளினது திரளாகிய அம்பலம்’ எனவும், ‘இருளினது திரள்போலும் கண்டம்’ எனவும் உரைக்க எம்மான் இன்பம்-சிவானந்தம். அரட்டர்-துடுக்குடையவர் அரட்டு -துடுக்கு. அழுக்கர்-மாசுடையவர். பிரட்டர் (பிரஷ்டர்) - நெறிதவறியவர். 38. ‘‘துணுக்கென’ என்பதை ‘துணுக்கென்று’ எனத் திரிக்க. துணிக்கெனல்-அஞ்சுதல். அணுக்கர்-அணுகியிருப்பவர்: அடியவர். அணிய-அண்மைக்கண் உள்ள. ‘‘செம்பொன் அம்பலத்தாடி’’ என்றது ஒருபெயர்த் தன்மைத்தாய், ‘‘அணிய’’ என்றதற்கு முடிபாயிற்று. சிணுக்கர் - அழுகையுடையவர். சிவபெருமானை இகழ்ந்து முணுமுணுத்தலை, ‘அழுகை’ என்றார். செத்தல்-செதுக்குதல்; பிறரைத் |