வணங்கியொழியாது. அதன் நடுவில் எழுந்தருளியிருக்கும் சிவமூர்த்தியை வணங்கி மகிழ்தல். மருந்து-அமுதம். மாறு- கேடு. அலர் அயன்- மலரின்கண் உள்ள பிரமன். ‘அயன்மாற்கு அரியதும், அடியார்க்கு எளியதும் ஆயதோர் பவளமால் வரை’ என்றது இல்பொருளுவமை. ‘‘அரிது மாய்’’ என்ற உம்மை, எச்சம், மலர்வாய்-மலரின்கண் பொருந்திய. வேரி-தேன். வார்- ஒழுகுகின்ற. குரு மணி-ஆசிரியருள் தலைவன். 49. தகைத்த- தடுத்து நிறுத்திய. சசி-சந்திரன். குலா-விளங்குகின்ற. மவுலி-முடியையுடையவன். ஆகுபெயர். கமலம் மூன்று. ஆதாரங்கள் ஆறனுள் மேல் உள்ள மூன்று. கீழ் உள்ள மூன்றில் பிறகடவுளர் இருத்தலின், இவற்றையே கூறினார். ‘அருள்சேர் நெடுங்கடல்’ என இயையும். சேர்-திரண்ட. மின்-ஒளி. கடல், ஆகுபெயராகாது. இயற்பெயராயே நின்று, பள்ளத்தையே உணர்த்திற்று. ‘‘வெள்ளம்’’ என வாளா கூறினாராயினும் இன்பம் சேர் (திரண்ட) வெள்ளம்’ என உரைக்க வெள்ளம் நீர்ப்பெருக்கு அருளின்வழியே ஆனந்தந் தோன்றுதலின், அதனைக் கடலாகவும், ஆனந்தத்தை அதன்கண் நிறைந்த நீர்ப்பெருக்காகவும் உருவகித்தார். சிவபிரானை, ‘‘பளிங்கு’’ என்றது திருநீற்றொளி பற்றி. பக்கு- புகுந்தபின். அவ்வடியை இனிப் போகவிடுவனோ இறுகப்பற்றிக்கொண்டேனாதலின்’ என்க. 50. இருள்-அறியாமை. மாயம்-நிலையாமை ‘இவற்றையுடைய பிறப்பு’ என்க. அறா-அறுத்து உய்விக்க மாட்டாத.. |