இம்மாட்டமை உடையவாயினும், மாட்டுவபோலச் சொற்சாலம் செய்தல் பற்றி, ‘‘இந்திர சால நெறி’’ என்றார். ‘‘பொய்’’ என்றது போலியை. ‘பொய்த் தெய்வங்களைக்கொண்ட நெறி’ என்க. புரிந்த-இடைவிடாது நின்று அருள்செய்த. புராண சிந்தாமணி- பழைய (எல்லாப் பொருட்கும்முன்னே உள்ள) சிந்தாமணி; என்றது. சிவபெருமானை. வைத்த-அமைத்த. ‘மெய்த் தெய்வ நெறியையுடைய நான்மறையோர்’ என்க. கோயிற்கண் உள்ளதும், அத்தெய்வ நெறிக்கண் விளங்குவதும் ஆகிய சிவம்’ என்க. அவம் - பயனில்லாத பிறபொருள்கள். அறிவரோ-பொருளாக நினைப்பரோ! நினையார். 51. பண்டறி சுட்டாய அகரச் சுட்டு, ‘‘செல்வம்’’ என்பதனோடு இயையும். கனா, நிலையாமை பற்றிவந்த உவமை. ‘சிந்தித்து’’ என்றது, ‘விரும்பி’ என்றவாறு. ஐவர், ஐம்புலன்கள் அழுந்தி-மிகப் பொருந்தி, அவமே-வீண்செயலிலே. பொடி-துகள். ‘அவர்க்கு அடிமை பூண்டேன்’ என்க. ‘இனி எனக்கு என்ன குறை’ என்பது குறிப்பெச்சம். 52. ‘கங்கையது நீர்போலும் நீரையுடைய அரிசில்’ என்க. ‘‘கங்கை நீர்’’ உவமையாகு பெயர். அரிசில், ஓர் |