59. மாதி - மாது உடையவள், தலைவி. மாது - அழகு. “மாதி” என்றது “அறிகிலள்” என்பதனோடு இயையும். மெய்ச் சுருதி - உண்மை நூலாகிய வேதம். அதன் விதிவழியோர், அந்தணர். புராணன் - பழையோன்; என்றது, ‘முற்பட்டவன்’ எனப் பொருள்தந்து. அமரர்களையும் தோற்றுவித்தோனாதல் குறித்தது “நீதி” என்றது பெருமையை; ‘அதனை அறியாதவளாய் அவன் திண் .தோள்களைப் புல்ல நினைத்தாள்: இது கூடுவதோ’ என்றபடி. இக்கூற்றால், இவ்வாசிரியர்க்கு இறைவன் திருவருட்கண் உள்ள வேட்கை மிகுதி புலனாகும். “அறிகிலள்” என்றது முற்றெச்சம். 60. “நினைக்கும்” என்றது முற்று. நிரந்தரன் - நிலை பெற்றிருப்பவன். நிலாக் கோலம் - நிலாவினால் உண்டாகிய அழகு. நயம் -விருப்பம். பேசும் - வெளிப்படையாக எடுத்துச் சொல்வாள். “நங்கைமீர்’’ என்றது முதலியன, தலைவி கூற்றைச் செவிலி அங்ஙனமே கொண்டு கூறியது. “ நங்கைமீர்” என்றதனைச் செவிலி கூற்றெனினும் இழுக்காது “ மனக்கு” என்றதில் அத்துச்சாரியை தொகுத்தல். மனக்கு இன்பவெள்ளம்-என் மனத்துக்கு இன்ப வெள்ளமாய் இருப்பவன். “நம்பி இன்பன், தருணேந்து சேகரன் என்றவை, ஒரு |