63. ‘நாண் அரவு’ எனவும் ‘அருள் கதி’ எனவும் மாறிக்கூட்டுக. போந்த மதில் அணி - வானில் திரிந்த மதில்களைக் கொண்ட.‘ வேதப் புரவித் தேர்ச் சாந்தை முதல் வேந்தன், என முன்னே கூட்டி, ‘முப்புரம் பொடியாட’ என்பதனை அதன்பின் வைத்து உரைக்க. ‘அருள் கதி’ என்றதற்கு, ‘அவனது அருளே எனக்குப் புகல்’ எனப் பொருள் கூறுக. ‘‘தையலை’’ என்றது ‘‘செய்கை’’ என்னும் தொழிற் பெயரோடு முடியும். ஆம் - நீர் ‘அதனால் உண்டாகிய தண்மையை உடைய திருவாவடுதுறை’ என்க. செய்கை - வருந்தச் செய்தலை.‘யார் அறிகிற்பர்’ என்றது, அறிந்து நீக்கவல்லார் யார் என்றதாம். 64. கிற்போம் - (வேள்வியை யாம் முடிக்க ) வல்லோம். எடுத்து- அதனைத் தொடங்கி. ஓடிக்கெட்ட - (பின்பு அது மாட்டாமல்) தோற்று ஓடி அழிந்த. சொல்-அத்தேவர்களது புகழ். பயன் தருவது. பயன் எனப்பட்டது. முன்னர்ப் போந்த சொற்குறிப்பால், ‘அவர் புகழ்கள் பயன்தருவனவாகா’ என்பது பெறப்பட்டது. ‘‘பாவிகாள்’’ என்றது, அவர் புகழ்களைப் பயன் தருவனவாகக் கருதிச் சொல்லுவோரை. எனச் சொல்லிச் சொல்லும்’’ என்றது, ‘என்று பலகாற் சொல்கின்ற’ |