68. ‘‘தேனுமாய்’’ என்ற ஆக்கம், உவமை குறித்து நின்றது. ‘‘உள்ளே’’ என்றதன்பின், ‘நின்று’ என ஒரு சொல் வருவிக்க. ‘என் ஆருயிர்க்குப் போகமாம் புரன்’ என்க. போகம் - சிவபோகம்; அதனையுடைய புரம் சிவலோகம். காலன், காமன், புரம் இவர்கட்கு அந்தகன் என்க. அந்தகன் - முடிவைச் செய்பவன். ஆலும் அதற்கே முதலும் - விளையாடுகின்ற அதற்கே முந்துவாள். போலும், ஆம் அசைநிலைகள், பொய்யாதது-மெய்யாகக் கூறிய சொல், ‘‘பொய்யாதது’’ என்ற சொல் முதல் திருப்பாட்டிற் சென்று மண்டலித்தல் காண்க.
திருஞான சம்பந்தர் செய்யதிரு வடிபோற்றி யருணாவுக் கரசர்பிரா னலர்கமல பதம்போற்றி கருமாள வெமையாளுங் கண்ணுதலோன் வலிந்தாண்ட பெருமாள்பூங் கழல்போற்றி பிறங்கியவன் பர்கள்போற்றி. 8 பேசுபுகழ் வாதவூர்ப் பிறந்துபெருந் துறைக்கடலுண் டாசிலெழி றடித்தயர வஞ்செழுத்தா லதிர்த்தெழுந்து தேசமலி தரப்பொதுவார் சிவபோக மிகவிளைவான் வாசகமா மாணிக்க மழைபொழிமா முகில்போற்றி. 9 _கோயிற் புராணம். |